இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
திலினி பிரியமாலியிடம் மாற்றப்பட்ட ராஜபக்ச அரசாங்கத்தின் பெருந்தொகை கருப்பு பணம்…
கொழும்பில் பல பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இணைய சேனலொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் புடவைகளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் ஆசிரியர்கள்!
அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் இந்த ஆடைகள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து புடவைகளை (சாரி) வாங்குவதில் சிக்கல்…
இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்: ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கொழும்பு போய்ச் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பெற்றுக்கொண்டார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் ரணில்…
மிஸிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இலங்கைப் பெண்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க (நிஷி) 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe நியூசிலாந்தில் முடிசூட்டப்பட்டுள்ளார். இது குறித்து நிஷி ரணதுங்க வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Mrs. Universe New Zealand அமைப்பின் தலைவர் மற்றும் பிரபல ஜூரிகள் குழுவின்…
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களிடம் பணம் பறிக்கும் மர்ம…
தொலைபேசிக்கு போலி அழைப்புக்களை மேற்கொண்டு இலங்கையர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. வரி செலுத்துமாறு கோரும் கும்பல் சிலரின் தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொண்டுள்ள குறித்த கும்பல், அவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை…
இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு தீர்மானம்: பிரதமர்
உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டங்களுக்கமைய உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வாத்துவை புதிய சந்தைத் தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எப்போதும்…
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்
பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட ரீயூனியன் தீவுகளில் தஞ்சம் அடைந்திருந்த இரண்டு இலங்கையர்களும், சட்டவிரோதமாக ஜப்பானில் வசித்து வந்த மற்றுமொருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகு மூலம் ரீயூனியன் தீவை அடைந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழையத் தயாரான இரண்டு இலங்கையர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (25)…
நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை
நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தினை கையெழுத்திட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெதர்லாந்துடன் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்…
இலங்கையுடனான பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள பங்களாதேஷ் வங்கிகள்
பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, ACU அமைப்பின் ஊடாக இலங்கையுடனான பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு நாட்டிலுள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய வங்கியின் அந்நியச் செலாவணிக் கொள்கைத் திணைக்களம் நேற்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்…
ஒடுக்கு முறைஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம்
மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இந்த போராட்ட இயக்கத்துடன் இணைந்து கண்டன பேரணி ஒன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஐக்கிய மக்கள் இயக்கத்தின் இணை அழைப்பாளர்…
நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு குடியுரிமை
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடமாடும் சேவைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 7,000 குடும்பங்களைச் சேர்ந்த 12,500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு…
இரட்டை பிரஜாவுரிமை எம்பிக்கள் -பொதுமக்களிடம் உதவிகோரும் நீதியமைச்சர்
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் அவ்வாறு சட்டத்தை மீறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட அமைச்சர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது தொடர்பில் மக்கள் அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான அமைச்சர்கள் தொடர்பில்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் 22வது திருத்தச் சட்டத்திற்கு…
22வது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு பாதகமும் இல்லாத சாதகமும் இல்லாத நிலை காணப்பட்டதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.…
இரட்டை குடியுரிமை எம்.பிக்களுக்கு வந்தது சிக்கல் உடன் பதவி விலக…
இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இரட்டைக் குடியுரிமை தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அறிக்கை வெளியிட முடியாது என்று கூறியுள்ள ஆணைக்குழு,இருபத்தியோராம் அரசியலமைப்பு திருத்தத்தின்படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்றும்…
புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு நிச்சயம்! ஜனாதிபதி ரணில் உறுதி
"தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும் எனவும் ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே தனது நோக்கம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "நான் தற்போது நாட்டின் தலைவர். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தட்டிக்கழிக்க முடியாது.…
பெரும்பான்மையை இழந்தது ரணில் அரசு
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 113 எம்.பி.க்களின் பெரும்பான்மையை முதன்முறையாக இழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்த போதிலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 93 எம்.பி.க்களின் ஆதரவே அதற்குக் கிடைத்துள்ளது. ரணிலை அதிபராக நியமிக்க வாக்களித்தோர்…
தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை(22) கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல்…
ரணில் நிரந்தர தீர்வை வழங்கினால் வரலாற்றில் நிலைத்திருப்பார்! – ஸ்ரீநேசன்…
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய அரசமைப்பு மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கினால் சரித்திரத்தில் நிலைப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இந்த நாட்டையும் மக்களையும் வளப்படுத்த…
இறுதிப்போரினால் மறைக்கப்பட்ட பேரவலங்களை பிரதிபலிக்கும் வகையில் நூல் வெளியீடு!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு இறுதிப்போரில் மறைக்கப்பட்ட ஈழத்தமிழர்களது உண்மைகளையும் ,போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும், போரினால் ஏற்பட்ட பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூலொன்று வெளியிடப்படவுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு கிடைத்த பாராட்டு
பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராட்டியுள்ளார். உத்தியோகபூர்வ குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் DefExpo 2022 உலக பாதுகாப்பு கண்காட்சியின் போது அவர் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில், 2022, அக்டோபர் 19 அன்று…
இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது: ரணில் விக்ரமசிங்கே
மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தனிநபர் மற்றும் கார்பரேட்டுக்கான வருமான…
அரசாங்கம் மக்களுக்கு பொய் கூறுகின்றது – எம்.பி சுமந்திரன் ஆதங்கம்
மக்கள், அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கோரவில்லை எனவும் மாறாக முழுமையான மாற்றத்தையே கோருவதாகவும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க வேண்டாம் எனவும் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,…
சட்டவிரோதமாக நுழைந்த 183 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய ஆஸ்திரேலியா!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த 183 இலங்கையர்கள், இதுவரை திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த நாட்டின் கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் கூட்டுப் பணி முகவர் பணிப் படையின் கட்டளை தளபதியுமான ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் அறிவித்துள்ளார். புதுடில்லியில் இடம்பெற்ற ஆசிய கடலோர காவல்படை தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனை…