இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்..! கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக –…
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்குமென யாழ். மாநகர சபை உறுப்பினர்…
இலங்கை மக்கள் மீது மேலும் வரிச்சுமையை திணிக்கும் வரவு செலவு…
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டமானது மக்கள் மீது மேலும் வரிச்சுமையை திணிக்கும் வகையிலேயே உள்ளது. அதில் மக்கள் நலத் திட்டங்கள் இல்லை என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். இந்நிலையில்…
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை கோரும் சவுதி அரேபியா
அஜ்லான் குழுமத்தின் பிரதித் தலைவரும், சவுதி அரேபியாவிலுள்ள சவுதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், இலங்கையில் முதலீடுகள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக அவர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று (13.11.2022) சந்தித்துள்ளார். 25 க்கும் மேற்பட்ட…
அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்துள்ள இலங்கை பிரபல வர்த்தகர் – அமெரிக்கா…
அமெரிக்க அதிகாரிகளால் அல்-கொய்தா பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இலங்கை தொழிலதிபர், சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்தார். எனினும் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இலங்கை அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பேருவளையில் வசிக்கும் தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட்…
இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் அனுபவிக்க வேண்டும்! பிரதமர் தினேஷ் குணவர்த்தனா
இலங்கையின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணுவதற்கு இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இலங்கையின் ஆயுர்வேதம் உலகம் முழுவதும்…
இலங்கையில் நோய் தொற்று அச்சம் – தயார் நிலையில் சுகாதார…
குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.. இதுவரை குரங்கம்மை நோயினால்…
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
இலங்கையில் நேற்று முதல் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டண திருத்ததில் மாற்றம் இடம்பெறாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் எவ்வித உடன்படிக்களும் ஏற்படவில்லை எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன…
ராஜீவ் கொலை வழக்கு – விடுதலையான ஈழத் தமிழர்கள் இலங்ககைக்கு…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அந்த ஆறு பேரில், இலங்கை குடிமக்களாக உள்ள நால்வர் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா, என்ற வினா எழும்பியுள்ளது. தற்போது விடுதலை…
இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்
இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது. சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வீடுகளை…
மோசமடையும் இலங்கையின் உணவுப் பற்றாக்குறை! எச்சரிக்கும் சர்வதேச அமைப்பு
இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று மீண்டும் எச்சரித்துள்ளது. அத்துடன் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 3.4 மில்லியனாக இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7 மில்லியன் மக்களுக்கு…
சுயாதீன வரவு செலவு அலுவலகம் அவசியமானது: ஹர்ஷ டி சில்வா
பொது நிதி, செலவுகள் மற்றும் கடன்களை முறையாக நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு சுயாதீன வரவு செலவு அலுவலகம் அவசியமானது, எனவே தேவையான சட்ட அதிகாரத்துடன் ஒரு வருடத்தில் அதனை நிறுவப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத்…
இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்- வியட்நாமில் உள்ள அகதிகள்
அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அகதிகளாக நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். கடலில் படகுகள் மூலம் இந்தியா,…
சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது – இராமேஸ்வரத்தில் தொடர் போராட்டத்திற்கு…
சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் புகையிரத மறியல் உள்ளிட்ட தொடர்போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை அவர்கள் முன் வைத்துள்ளனர். சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி…
வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் பலவீனத்தைக் காட்டாதீர்! – எதிரணியைக்…
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் பலவீனங்களைக் காட்ட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கொழும்பில் கடந்த 2ஆம் திகதி அரசுக்கு எதிராக எதிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப முடியாத நிலையில் தனுஷ்க குணதிலக்க
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணை முடியும்வரை அவரால் நாடு திரும்ப முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலிய சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை…
யாழ்தேவி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
காங்கசந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் இன்று பிற்பகல் தடம் புரண்டது. புகையிரதத்தின் இயந்திரமும் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வடக்கு பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரயில் தடம் புரண்டதன்…
புகலிட கோரிக்கை நிராகரிப்பு! பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்
ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது. கடந்த 31 ஆம் திகதி இவர்களின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன் காத்திருப்பு பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் 8 புலம்பெயர்வோர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள்…
இலங்கையின் நிலைமை தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்றில் விவாதம்
இலங்கையின் நிலைமை குறித்து அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுச்சபையில் விவாதம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழுவின் விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி பொதுச்சபையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசை…
இலங்கைக்கு 4.7 தொன் அவசர மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ள கத்தார்
மருத்துவ உதவிக்கான அவசர ஏற்றுமதி இலங்கைக்கு வந்துள்ளது,மேலும் இது நாட்டின் சுகாதாரத் துறையை ஆதரிப்பதற்காக அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று QNA தெரிவித்துள்ளது. கத்தாரின் மருத்துவ உதவியை இலங்கைக்கான கத்தார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் அல் சொரூர் பெற்றுக்கொண்டதுடன், அதனை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம்…
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: ஜப்பான் தூதுவர் உறுதி
தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. உங்களுக்கு உரிய திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன் இருக்குமாயின், ஜப்பானில் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட…
‘தமிழினத்தின் சமாதானக் குரல்’ நீள்துயிலுக்குச் சென்று இன்றோடு 15 ஆண்டுகள்
தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கிறது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றியிருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அதற்காகவும் நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழரின் இன விடுதலைப் போராட்ட வரலாற்றில்…
இலங்கை: அரசாங்க எதிர்ப்புப் பேரணியைக் காவல்துறை தடுத்தது
இலங்கையில் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் பேரணியை காவல்துறையினர் தடுத்துள்ளனர். தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போராட்டக்குழுத் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 2 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் அந்த இருவரையும் விடுதலை செய்யவேண்டும்…
கொழும்பில் இன்று பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! அரச உயர் கட்டிடங்களும் பாதுகாப்பு…
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது நாடாளுமன்றம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை பிரதமர் அலுவலகம், பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக இன்றையதினம் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள்…