இலங்கையில் நோய் தொற்று அச்சம் – தயார் நிலையில் சுகாதார பிரிவினர்

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் சிகிச்சையளிக்கப்படவுள்ளது..

இதுவரை குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் டுபாயிலிருந்து இலங்கை வந்தவர்களாவர்களாகும்.

குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளை இலகுவாக அடையாளம் காண முடியும் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

 

-ift