தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கிறது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.
இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றியிருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அதற்காகவும் நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தமிழரின் இன விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலை என்ற ஏக்கத்தை தீராத தாகமாய் கொண்டு தம்மை அதற்காக அர்ப்பணித்தவர்கள் அனேகர்.
அவர்களுள் தனது மிக நீண்ட போராட்ட கால பங்கேற்பு மற்றும் தாயக போராட்டத்தின் மீது தான் வகித்த வகிபாவம் ஆகியவற்றால் விடுதலைப்போராட்ட வரலாற்றின் பக்கங்களில் தனக்கான தனித்துவத்தை பதித்துக்கொண்டவர் சு. ப. தமிழ்ச்செல்வன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பை தனது இறுதிக்காலம்வரை வகித்தவரும், தமிழினத்தின் சமாதானக் (அரசறிவியல்) குரல் என்று சர்வதேச சமூகத்தாலும் நித்திய புன்னகை அழகன் என தாயக மக்களாலும் கொண்டாடப்பட்ட சு. ப. தமிழ்ச்செல்வன் தான் நேசித்த தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரை ஈகம் செய்து நிரந்தர நித்திரை ஆகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது.
-ibc