இலங்கையில் புடவைகளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் ஆசிரியர்கள்!

அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் இந்த ஆடைகள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து புடவைகளை (சாரி) வாங்குவதில் சிக்கல் நிலவி வருவதாகவும், போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்கள் பலர் துவிச்சக்கரவண்டி, உந்துருளிகளில் பாடசாலைக்கு வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புடவை அல்லது ஒசரியை விட இலகுவான உடையை அணிவதன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களை கையாள்வதில் திறமையாக செயல்பட முடியும் என்றார்.

 

 

 

-ift