இரட்டை குடியுரிமை எம்.பிக்களுக்கு வந்தது சிக்கல் உடன் பதவி விலக பணிப்பு

இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அறிக்கை வெளியிட முடியாது என்று கூறியுள்ள ஆணைக்குழு,இருபத்தியோராம் அரசியலமைப்பு திருத்தத்தின்படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது

தேர்தல் நேரத்தில் வேட்புமனுக்களை ஏற்கும் போது இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக ஏதேனும் தரப்பினர் அறிக்கை அளித்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரா என்பதை ஒரே நேரத்தில் அறிவிக்க முடியாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உடனடியாக பதவி விலக வேண்டும்

இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் (கோப் குழுவின்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், அவர்கள் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்..

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.க்கள் அந்த பதவிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

-ibc