வீரமான விவேக கஸ்தூரி பட்டு,  விட்டு கொடுக்கிறார்

கஸ்தூரி பட்டு 2013 முதல் பினாங்கில் உள்ள பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியின் நடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மறைந்த மூத்த டிஏபி தலைவர் பி பட்டுவின் மகளான அவர்,  தான் புதிய தலைவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதாகவும், தான் வேட்பாளராக…

நவம்பர் 19-ம் தேதி பொதுத்தேர்தல்  

15வது நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரச்சார காலம் 14 நாட்கள் நீடிக்கும். முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும். பெர்லிஸ், பேராக் மற்றும் பகாங் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் மற்றும்…

தேர்தலின் போது வெள்ளம் ஏற்பட்டால், நடவடிக்கைகளை எடுக்க தயார் –…

வரவிருக்கும் பொதுத் தேர்தலின் போது வெள்ளம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் தயாரா, என்ன செய்வீர்கள், விளக்கம் தாருங்கள் என்று  பெர்சே அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும், மக்கள் தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைக்காமல் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் தேசிய, மாநில…

நான் உங்களுக்கு முதுமையாகத் தெரிகிறேனா – டாக்டர் மகாதீர் முகமட்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று, வயது முதிர்வு காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்த போதிலும், தனது லாங்காவி நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்க இன்னும் தகுதியானவர் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். அவருக்கு வயது 97. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்…

GE15: ஹரப்பானுடனான பேச்சுவார்த்தை தோல்வியா? யோசனையில் மூடா!

இரு தரப்பினரும் ஏற்கனவே ஒரு தேர்தல் ஒப்பந்தத்தை உருவாக்க ஒப்புக்கொண்டபோதிலும், தொகுதி பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், 15 வது பொதுத் தேர்தலில் (GE15) தனியாகச் செல்ல மூடா ஆலோசித்து வருகிறது. மூடாவிற்கும் ஹரப்பானுக்கும் இடையில் இன்றுவரை இருக்கை பேச்சுவார்த்தைகள்பற்றிய உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவுமில்லை என்று மூடாவிலிருந்து நன்கு…

அரசாங்க ஊழியர்கள் யாருக்கு வாக்களிப்பர்?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசாங்க ஊழியர்கள் காலங்காலமாக தேசிய முன்னணிக்குதான் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் கிட்டதட்ட எல்லா அரசு ஊழியர்களின் வாக்குகளும் தங்கு தடையின்றித் தங்களுக்குக் கிடைக்கும் எனும் மமதையில் இருந்துவந்த அக்கூட்டணிக்கு 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி…

இஸ்மாயில் சப்ரி அரசியலமைப்பை இழிவுபடுத்தக் கூடாது

அட்டர்னி ஜெனரலின் அரசியலமைப்பு நிலைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது லிம் கிட் சியாங் கடுமையாகச் சாடினார். ‘My Story: Justice in the Wilderness’ என்ற தலைப்பில் உள்ள அவரது புத்தகத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக, டாமி தாமஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அட்டர்னி-ஜெனரல்…

சார்லஸ் சந்தியாகோவே மீண்டும் கிள்ளானுக்கு வேட்பாளராக வேண்டும்

கிள்ளான் மக்களுக்காக சிறப்பாக சேவைபுரியும் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் கிள்ளானுக்கே வேட்பாளராக தேர்ந்துடுக்கப் படவேண்டும் என்று கிள்ளான் இந்திய அரசு சார இயக்கங்கள் சூளுரைத்தன. கிள்ளான் தொகுதியில் கடந்த 3 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சந்தியாகோ தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வட்டார மக்களுக்கு அவரின் ஒப்பற்ற சேவையை ஆற்றியுள்ளார். இவரின்…

கல்வி முறை பற்றி ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தடைவிதிக்கவில்லை…

கல்வி முறை குறித்து ஆசிரியர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவதை தனது அமைச்சகம் ஒருபோதும் தடுக்கவில்லை என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் கூறியுள்ளார். அனைகளிடமிருந்தும் கருத்துக்களையும் அமைச்சகம் வரவேற்கிறது. "கல்வியாளர்களுடன் நான் எந்த ஈடுபாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான கதவை நான் ஒருபோதும் மூடவில்லை," என்று…

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா-ஆன்-அரைவல் முறை தேவை

மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் மலேசியாவிற்கு வருகை தரும் இந்திய குடிமக்களுக்கு நேரடி விசா-ஆன்-அரைவல் முறையை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மட்டா தலைவர் டான் கோக் லியாங், மின்னணு விசா போர்ட்டலில் சமீபத்திய ஒரு மாத கால இடையூறு, 30 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு…

அம்னோவை மறைவாகக் குற்றம் சாட்டுதல்: சையட் சாடிக் மன்னிப்பு கேட்குமாறு…

ஞாயிற்றுக்கிழமை மூவாரில் அம்னோ உறுப்பினர்கள் அவரது நிகழ்வில் இடையூறு விளைவித்ததாக அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அம்னோ மற்றும் பின்னிடம்  பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு ஜொகூர் பிஎன், மூடா தலைவர் சையட் சாதிடிக் சையட் அப்துல் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 15வது பொதுத் தேர்தலுக்கான ஜொகூர் BN  இயக்குநரான ஒன்…

நெசாட் சூறாவளி குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் பலத்த…

மலேசிய வானிலை ஆய்வு மையம் நேசாட்(Nesat) சூறாவளிகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது, இது சபாவின் குடாட்டில்(Kudat) இருந்து வடமேற்கே சுமார் 1,328 கிமீ தொலைவில் உள்ளது. சீனாவின் ஹைனான்(Hainan) நகருக்கு கிழக்கே சுமார் 380 கிமீ தொலைவில் இந்தச் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பட்ஜெட் 2023 ஆண்டு இறுதிக்குள் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் – இஸ்மாயில்…

2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டின் சாராம்சத்தை செயல்படுத்த  விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். "நாங்கள் பட்ஜெட்டை அறிவித்துள்ளோம். மக்களுக்குப் பல நன்மைகளை வழங்க விரும்புகிறோம்,…

ஒருமைப்பாட்டு நிகழ்வில் இஸ்மாயில் சப்ரி – ஜஹிட் ஹமிடி ஒன்றாக…

அம்னோவின் இரண்டு போட்டி முகாம்களும், அதாவது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இன்று ஒன்றாக இணைந்து, அவர்களின் விரோதத்தை புதைக்க தயாராக இருப்பதாக தெரிகிறது. பார்லிமென்டை எப்போது கலைப்பது என்பது உட்பட பல்வேறு விஷயங்களில் பிளவுபட்டிருந்த இரு பிரிவு தலைவர்களும்…

1எம்டிபி  வழக்கு: நீதிமன்றத்தை அவமதித்ததிற்காக  ஜோ லோ மற்றும், அவரின்…

தொழிலதிபர் லோ டேக் ஜோ மற்றும் அவரது தந்தை லாரி லோ ஹாக் பெங் ஆகியோருக்கு எதிரான தடை உத்தரவை பின்பற்றாததற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் சிறை தண்டனையை விதித்துள்ளது. இன்று நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ், நீதிமன்ற விசாரணையின் போது ஜோ லோ மற்றும் ஹாக்…

BN அறிக்கைக்காகச் சுகாதாரம் தொடர்பான திட்டங்களைக் கைரி தயாரிக்கிறார்

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், 15 வது பொதுத் தேர்தலுக்கான (GE15) கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட BN இன் பரிசீலனைக்காகப் பல சுகாதாரம் தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரித்து வருவதாகக் கூறினார். புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு மற்றும் புகைபிடிக்கும் மசோதா 2022 இதில் அடங்கும் என்றும், இந்த முன்மொழிவுகள்…

அன்வார்: இனி ஏமார மாட்டோம், ஹராப்பானுக்கு புதிய ‘தலைவர்’ இருக்கிறார்

தற்போது கூட்டணிக்கு ஒரு புதிய "தலைவர்" இருப்பதால், பக்காத்தான் ஹராப்பான் செயலாக்கம் பற்றி மக்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை, என்றார் அன்வார் இப்ராகிம். ஹராப்பான் தலைவரின் கூற்றுப்படி, கூட்டணியில் இனி "பழையன" இல்லை, மேலும் முந்தைய வாக்குறுதிகள் முடிந்தவரை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். “ஹரப்பான் 22 மாதங்கள் மலேசியாவை…

15வது பொது தேர்தல்: பெர்சத்து – ஹராப்பான் கூட்டணி வேலை…

வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில்  பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்பதை பெர்சத்து உறுதிப்படுத்தியது. ஹராப்பான் கவுன்சில் தங்களுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற முடிவையும் பெர்சது கவனத்தில் எடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். "பெர்சாத்து மற்றும் ஹராப்பான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த அறிக்கையைப் பொறுத்தவரை,…

அம்னோவில் குழப்பம், அதான் பாஸ் PN ஐ தேர்வு செய்தது

இஸ்லாமியக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அம்னோவுடனான  ஒப்பந்தம் ஏன் தோல்வியடைந்தது என்பதற்கான காரணங்களை வெளியிட்டதால் , அம்னோ-பாஸ் அரசியல் ஒத்துழைப்பு திரும்ப முடியாத நிலையை எட்டியுள்ளதாகத் தோன்றுகிறது. முவாபாக்காட் நேஷனல் (MN) ஒத்துழைப்பை ஹடி 'பழுக்காத துரியன்' சாப்பிடுவதற்கு ஒப்பிட்டார், இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.…

பகாங் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது

பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் 15வது பொதுத் தேர்தலுடன் (GE15) ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தலை நடத்த அனுமதிக்கும் வகையில், 14வது பகாங் மாநில சட்டமன்றம் இன்று  கலைக்கப்படுவதாக அறிவித்தார். வான் ரோஸ்டி (மேலே) பகாங் தெங்குவின் ரீஜண்ட் ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷாவிடம்(Hassanal…

பாஸ் கட்சி தான் வழிநடத்தும் மாநிலங்களில் சொந்த சின்னத்தை பயன்படுத்தும்

15வது பொதுத்தேர்தலில் (GE15) போட்டியிடும்போது PAS அதன் சொந்த சின்னத்தில் தான் தற்போது முன்னணி வகிக்கும் மூன்று மாநிலங்களில் – கிளந்தான், திரங்கானு மற்றும் கெடாவில் போட்டியிடும். PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மேன் கருத்துப்படி, மற்ற மாநிலங்களில் போட்டியிடும்போது கட்சி பெரிகத்தான் நேசனல் (PN)…

பொதுத்தேர்தலில் சபா மற்றும் சரவாக் துருப்பு சீட்டாக இருக்கும் –…

15வது பொதுத் தேர்தலில் சபா மற்றும் சரவாக் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள இடங்களின் எண்ணிக்கையால் கிங்மேக்கர்களாக இருக்கும் என்று வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டல் அறிவித்துள்ளார். சபாவில் 25 நாடாளுமன்ற இடங்களும் சரவாக்கில் 31 இடங்களும் உள்ளன. அடுத்த அரசாங்கத்தை எந்த கூட்டணி அமைப்பது என்பதை அவர்களால்…

பினாங்கு மாநில சட்டசபை கலைப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை…

பினாங்கு மாநில சட்டசபையை கலைப்பது குறித்து கட்சி இன்னும் ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை என்று டிஏபி பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இரண்டு மணிநேரக் கூட்டத்திற்குப் பிறகு டிஏபி இந்த விஷயத்தில் முடிவு செய்ததா என்று கேட்டதற்கு, "எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று லோகே கூறினார்.…