மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள மலேசிய விளையாட்டுகளை (சுக்மா) ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா பரிந்துரைத்துள்ளார். ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிக செலவாகும் என்று சுல்தான்…
ரோஸ்மாவைப் பற்றி மகாதிர் அவதூறாக பேசக்கூடாது
டாக்டர் மகாதிர் போன்றோர் ரோஸ்மா மான்சோர் மீது அவதூறு கூறுவது வருத்தத்திற்குரியதாகும் என்று பிரதமர் நஜிப்பின் துணைவி ரோஸ்மா மன்சோரின் சிறப்பு அதிகாரி கூறுகிறார். மகாதிர் போன்ற ஒருவர் எப்படி வதந்தியை செவிமடுத்து, அதை நம்புவது? அவர் குற்றம்சாட்டுவதற்கு முன்னர் அது சம்பந்தட்ட உண்மையை ஆய்ந்து தெரிந்துகொண்டிருக்க…
சுப்ரா: கேமரன் மலை மஇகாவுக்கே
மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் மைபிபிபி தலைவர் எம். கேவியஸும் இன்று புத்ரா ஜெயாவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு கேவியஸ் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கொண்டுள்ள விருப்பம் பற்றியதாகும். எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இத்தொகுயில் போட்டியிடும். அதை விட்டுக்கொடுக்கப்…
தேர்தலில் பிஎன், நஜிப் கை மேலோங்கியிருக்கும்: ஆய்வாளர்கள் கணிப்பு
எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் மற்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கை மேலோங்கியிருக்கும் எனப் பிரபல அரசியல் ஆய்வாளர்கள் இருவர் கூறுகின்றனர். கடந்த ஓராண்டுக் காலமாக பக்கத்தான் ஹரபான் ஆதரவு சரிந்திருப்பதாகக் கூறிய யுனிவர்சிடி மலேசியா சரவாக் இணைப் பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமிர், …
கெடாவில் வெற்றி உறுதி: ஹரபான் எம்பி நம்பிக்கை
14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரபான் கெடாவைக் கைப்பற்றும் வய்ப்பு பிரகாசமாக இருப்பதாய் பிகேஆர் எம்பி ஒருவர் கூறினார். அதற்கு முக்கிய காரணம் டாக்டர் மகாதிர். இதனைத் தெரிவித்த சுங்கை பட்டாணி எம்பி ஜொஹாரி அப்துல், 2016இல் முக்ரிஸ் மகாதிர் திடீரென்று பதவியிலிருந்து அகற்றப்பட்டு அஹமட் பாஷா ஹனாபியா …
திருடர்கள் கைகளில் வைரக் கேரட், சொத்தின் உரிமையாளர்களுக்கு வாயில் கேரட்டா?
மலேசியாவின் 1எம்டிபி நிதியிலிருந்து கொள்ளையடித்த பிரதமரின் அயல் நாட்டு தோழர் ஜோலோ காதலர் தினப் பரிசாக அவர் காதலி கெர்கிற்கு (ஆஸ்திரேலிய அழகிக்கு) 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இதய வடிவிலான 11.72 கேரட் வைரத்தைப் பரிசளித்தார். மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக்கின் மனைவி…
அஸ்மின்: பாஸை இனியும் சகித்துக்கொள்வதற்கில்லை
வரும் பொதுத் தேர்தலில் பாஸுடன் ஒத்துழைப்பு இல்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி மீண்டும் வலியுறுத்தியிருப்பதாக நன்யாங் சியாங் பாவ் அறிவித்துள்ளது. “சிறிது காலமாக சகித்துக் கொண்டிருந்தேன், மிகவும் பொறுமை காத்தேன்”, என அஸ்மின் அந்தச் சீனமொழி நாளேட்டிடம் கூறினார். பாஸுடன் தொகுதி பங்கீட்டுப் …
சாப் கோ மே-வுக்குப் பிறகு, நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
சாப் கோ மே முடிந்த ஒரு வாரத்தில், மார்ச் 2-ல் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாப் கோ மே, இம்மாதம் 16-ம் தேதி வரவுள்ள சீனப்பெருநாளின் 15-வது நாள் கொண்டாடப்படும். அரசியல் ஆய்வாளர்கள் பொதுத் தேர்தலுக்கான சிறந்த காலம் குறுகியதாகவும், மார்ச் மாத…
‘செக்ஸ் காணொளியில் இருப்பது நானல்ல’- சொங் வே மறுப்பு
மலேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வே, சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் செக்ஸ் காணொளியில் இருப்பது தான் அல்ல என்று மறுத்துள்ளார். சின் சியு டெய்லியிடம் பேசிய சொங் வே அது வேறு யாரோ என்றார். “அவர் என்னைப்போல் தோற்றம் கொண்டவர்கூட அல்ல. “ஏன் இப்படி? சிலருக்கு …
ஆயர் ஈத்தாம் வேட்பாளர் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை- அமனா
ஜோகூர், ஆயர் ஈத்தாமில் அமனா கட்சி வேட்பாளர் டிஏபி சின்னத்தில் போட்டியிடுவது என்று இறுதி முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை அமனா மறுத்துள்ளது. “இல்லை, இல்லை, அப்படி எதுவும் முடிவு செய்யப்படவில்லை”, என அமனா தலைவர் முகம்மட் சாபு கூறினார். “இன்னும் விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம்”, என்றார். டிஏபிக்கு ஒதுக்கப்பட்ட …
இபிஎப்: சந்தாதாரர்கள் சேமிப்புகள், தரவுகள் பாதுகாப்பாக உள்ளன
இன்று காலை சிலாங்கூர் ஊழியர் சேமநிதி (இபிஎப்) வாரிய தலைமையகக் கட்டிடத்தில் மூண்ட தீயில் சந்தாதாரர்களின் சேமிப்புகள், தரவுகள் பாதிக்கப்படவில்லை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது. இதனைத் தெரிவித்த இபிஎப் கார்ப்பரேட் தொடர்புத் துறை அந்த பெட்டாலிங் ஜெயா அலுவலகம் மறு அறிவிப்பு வரை மூடப்படுவதாக தெரிவித்தது. “வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் …
இபிஎப் தலைமையகத்தில் தீ
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஊழியர் சேமநிதி (இபிஎப்) தலைமையகக் கட்டிடத்தில் தீ பற்றிக்கொண்டது. அக்கட்டிடத்தின் பல மாடிகளில் தீ பற்றிக் கொண்டது. தீயைக் கட்டுப்படுத்த தீ அணைப்பு, மீட்புத் துறையினர் கடுமையாக போராடுகிறார்கள். தீ விபத்துக் காரணமாக அவ்வட்டாரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை மணி 11.50 …
ஆட்ட நிர்ணய மோசடி: மலேசிய பூப்பந்து ஆட்டக்காரரிடம் விசாரணை
போட்டிக்கு முன்னரே முடிவுகளை நிர்ணயம் செய்யும் மோசடி தொடர்பில் மலேசிய பூப்பந்து வீரர் ஒருவருக்கு எதிராக உலகப் பூப்பந்து சம்மேளனம்(பிஎம்எப்) விசாரணை செய்து வருவதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் இன்று கூறியது. விசாரணை முடியும்வரை அந்த ஆட்டக்காரர் போட்டிகளில் கலந்துகொள்ளத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாளேடு கூறியது. அனைத்து …
‘போலிச் செய்திகளை ஒடுக்குவது உண்மையென்றால் ஜாசாவை இழுத்து மூடுவீர்’
புத்ரா ஜெயா “போலிச் செய்திகளை’ ஒடுக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் முதலில் சிறப்பு விவகாரத் துறையை இழுத்து மூட வேண்டும் என்கிறார் செனாய் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஷு கி. “போலிச் செய்திகள்” சட்டவிரோதமானவை என்றால், அவற்றைப் பரப்பும் ஜாசா இயக்குனர் முகம்மட் புவாட் ஸ்கார்ஷியைத்தான் முதலில் கைது …
வசந்தப்பிரியா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வார், குற்றச்சாட்டை அவரது தந்தை…
தனது மகள், சுயமாக தன்னைக் காயப்படுத்திகொள்வார் எனும் குற்றச்சாட்டை வசந்தபிரியாவின் அப்பா, ஆர். முனியாண்டி மறுத்துள்ளார். இன்று நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், 2016-ல் வசந்தப்பிரியா தனது மணிகட்டை வெட்டிக்கொண்டு, தன்னைத் தானேக் காயப்படுத்திக் கொண்டுள்ளார் என்று புகார் கூறியுள்ள துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதனை அவர் சாடினார். "கமலநாதனிடம்…
ஹரபான்: சிலாங்கூரில் 15, 20 தொகுதிகள்மீது பேச்சுகள் தொடர்கின்றன
சிலாங்கூர் பக்கத்தான் ஹரபானின் பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் இன்னும் முடிவுபெறவில்லை. 15-20 தொகுதிகள் யாருக்கு என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்கிறார் சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் தேர்தல் இயக்குனர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். “இன்னும் முடிவு பெறவில்லை. பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். “15, 20 தொகுதிகள்மீது …
திடமாய் இருப்பீர்: ரபிசிக்கு மகாதிர் அறிவுரை
டாக்டர் மகாதிர் முகம்மட், ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் 30மாதச் சிறைத்தண்டனை விதித்தது குறித்து மனம் தளர்ந்துவிடக் கூடாது என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கு அறிவுறுத்தியுள்ளார். “ரபிசி திடமாய் இருக்க வேண்டிய தருணம் இது. மனம் தளர்ந்து விடாதீர்கள்”, என பக்கத்தான் ஹரபான் தலைவர் இன்று …
முகைதின்: ஹரபான் நிகழ்வில் அம்னோ குண்டர்கள் அட்டகாசம்
வார இறுதியில் ஜோகூரில் பக்கத்தான் ஹரபான் நிகழ்வு ஒன்றில் புகுந்து அட்டூழியம் புரிந்தவர்களை “அம்னோ குண்டர்கள்” என பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் வருணித்தார். “சீனப் புத்தாண்டை ஒட்டி நடத்தப்பட்ட எங்கள் நிகழ்வு ஒன்றில் அட்டூழியம் செய்த அம்னோ/பிஎன் குண்டர்களின் செயலைக் கண்டித்து ஜோகூர் பக்கத்தான் ஹரபான் அறிக்கை …
இபிஎப் ஈவுத் தொகைக்கும் ஜிஇ 14-க்கும் சம்பந்தமில்லை -சாலே
அண்மையில் தொழிலாளர் சேமநிதி (இபிஎப்) ஈவுத் தொகை - கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய ஈவுத்தொகை இதுதான் - அறிவித்ததற்கும் 14வது பொதுத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில் எதிர்க்கட்சிகள் அதைத் “தேர்தல்கால ஈவுத்தொகை” என்று …
‘பிஎன் பொய் சொல்ல முடியாது, தேர்தல் செயல்முறை மிகவும் இறுக்கமானது’
வரவிருக்கும் பொதுத் தேர்தலில், மோசடிகள் நடக்கும் என்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் மறுத்தார். தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அமைப்பு, அதை அனுமதிக்காது என்று அவர் கூறினார். "தேர்தல் நடைமுறை மிகவும் இறுக்கமாக இருப்பதால், நம்மால் பொய் சொல்ல முடியாது. நாம் ஏமாற்றி இருந்தால், தற்போதய…
பாலியல் துன்புறுத்தல் – #உண்டி ரோசாக் ஆர்வலர் போலிஸ் புகார்…
#உண்டி ரோசாக் பிரச்சார ஒருங்கிணைப்பாளர், மரியாம் லீ, தனக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, இன்று காலை, உலு கிள்ளான் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். பேஸ்புக் மலேசியா கெக்ஸ்-இல் இடம்பெற்ற, #உண்டி ரோசாக் கலந்துரையாடல் மன்றத்தில், அவரின் பங்கேற்பைக் காட்டிய வீடியோ காட்சிகளிலுள்ள அனைத்து கருத்துகளையும் வாசித்ததாக…
பெர்சே : தேர்தல் மோசடிகளைத் தோற்கடிக்க வாக்களியுங்கள்
14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தூய்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்கான கூட்டணி (பெர்சே) தேர்தல் மோசடிகளைத் தோற்கடிக்கும் முயற்சியாக அனைத்து மலேசியர்களும் வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்து, இன்று தனது புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, காப்பி கடைகளில் கலந்துரையாடல்கள் மற்றும்…
குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜொகூர் பாருவில் ஹராப்பான் கூட்டம் இரத்து
நேற்றிரவு, கம்போங் பாக்கார் பத்து, ஜொகூர் பாருவில் பக்காத்தான் ஹராப்பான் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. ஸ்துலாங் சட்டமன்ற உறுப்பினர் எண்ட்ரு சென் கா ஏங், அம்னோ மற்றும் பிஎன்-னின் இடையூறு காரணமாக அது ஏற்பட்டது என்று கூறினார். “அரசாங்கம் என்ற வகையில்,…
ரஃபிசி : “உண்மைதான் பாதிக்கப்பட்டது நான் அல்ல, மாடுகளும் அதன்…
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேஷன் (என்.ஃப்.சி.) ஊழலில் பாதிக்கப்பட்டது ரஃபிசி அல்ல என்ற அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட்டின் கூற்றை, பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லி ஒப்புக்கொண்டார். “அவர் (ஷரிசாட்) சொல்வது உண்மைதான் என்று நான் நினைக்கிறேன்.” “வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் உண்மையாக் பாதிக்கப்பட்டது அந்த மாடுகள்தான், அவை…












