அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் ரஷ்யா புதிய தூதரகம் கட்ட ஆஸ்திரேலியா…
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி , நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே ரஷ்யாவின் புதிய தூதரகத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் தடைசெய்யப்படும் என்று கூறியுள்ளார். தேசியப் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலை விளைவிக்கக்கூடும் என்ற அக்கறையால் அரசாங்கம் கட்டுமானத்தை நிறுத்துவதாக அவர் கூறினார். ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றக் கட்டடம் தலைநகர் கான்பெராவில்…
அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்: பெலாரஸ் அதிபர்
ரஷியா அணு ஆயுதங்களை அடுத்த மாதத்தில் இருந்து பெலாரஸ்க்கு நகர்த்துகிறது பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில் ''அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை கடவுள்…
ஜப்பானில் ராணுவ மையத்தில் துப்பாக்கி சூடு
மத்திய ஜப்பானின் கிபு பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஒரு ராணுவ வீரர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள், துப்பாக்கி…
சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது. சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு…
கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஈராக்கில் ரூ.12 லட்சம் கோடி பட்ஜெட்…
கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஈராக்கில் ரூ.12 லட்சம் கோடி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கில் இருந்து தனி நாடாக குர்திஸ்தான் பிரிந்தது. இர்பிலை தலைநகராக கொண்ட இது ஈராக்கின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டது. இந்த இருநாடு களுக்கிடையே பொருளாதார ரீதியில் மோதல் வலுத்து வருகிறது. 329 இடங்களை…
ரஷியப் படைகளிடம் இருந்து 7 கிராமங்களை மீட்கப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு
ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின்…
அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்: யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா
யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நட்புறவை வளர்க்கும் பொது அமைப்பாக ஐ.நா. உள்ளது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு விளங்குகிறது. கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொடர்பு துறைகளை ஊக்குவிக்கும் வகையில்…
கனடாவில் எரியும் காட்டுத்தீ , கோடை முழுவதும் நீடிக்க வாய்ப்பு
கனடாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயால் நாடு முழுக்க ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். கட்டுக்கடங்காத தீ கோடைக்காலம் முழுவதும் நீடிக்கலாம் என்று வட்டார அமைச்சர் ஒருவர் எச்சரித்தார். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து சுமார் 17,800 சதுர மைல் அளவிலான நிலம் தீக்கு இரையானது. கனடாவின் மேற்குப் பகுதி காட்டுத்தீயால்…
பெருவில் 4 மாதத்தில் 3,400க்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 3,400 க்கும் மேற்பட்ட பெண்கள் பெருவில் காணாமல் போயுள்ளனர் என்று ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அலுவலக அறிக்கையில் -- "அவர்களுக்கு என்ன நடந்தது?" -- 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 3,406 பெண்களைக் காணவில்லை…
தாய்லந்தின் புக்கெட்டில் பரவும் மர்ம நோய்
தாய்லந்தின் புக்கெட் நகரின் 3 வட்டாரங்களில் அடையாளம் தெரியாத கிருமியால் 100 பேர் நோய்வாய்ப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்தது. கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. கிருமித்தொற்றை ஆராயவும் நிலைமையைச் சமாளிக்கவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை நிலையத்தைத் திறந்துள்ளது. வயிற்றுப்போக்கால் மரணங்கள் ஏற்படுவது…
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ்…
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் என்ன?: போரிஸ் ஜான்சன் 2019ல் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய…
ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷியா
ரஷியாவுக்கு ஈரான் டிரோன்கள் வழங்கி வருகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு உக்ரைன் மீதான போருக்குப்பின் வழங்குவதை நிறுத்துவிட்டோம் எனக் கூறுகிறது ஈரான் உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்…
இங்கிலாந்தில் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை
இங்கிலாந்தில் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசித்து வந்தது. அதன்படி நாட்டின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கான…
வெள்ளை மாளிகையிலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற குற்றத்திற்காக ட்ரம்ப்…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையிலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளைப்…
ஆப்கான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு- 11…
ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி கொலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு. குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று…
கனடா காட்டுத்தீயால் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்தது. இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தகவல். காட்டுத்தீ…
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் மசூதியை இடிக்க எதிர்ப்பு: முஸ்லிம்கள் போராட்டம்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசாங்கம் மதம் மற்றும் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற மசூதி உள்ளது. இது மிகவும் பழமையானதாகும். இந்த மசூதியில் உள்ள நீல நிற குவிமாடப் பகுதிகளையும், கோபுரங்களையும்…
உக்ரைன் அணை தகர்ப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு
உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில்…
அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம்
சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற…
பிலிப்பைன்சில் மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயம் – விமானங்கள் பறக்க…
பிலிப்பைன்சில் மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி எரிமலை சீற்றம் காரணமாக கடும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல்…
அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்பை எதிர்த்து முன்னாள் துணை…
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு: 14 பேர் பலி…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகி உள்ளனர். தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக…
இதுவரை 500 உக்ரேனிய குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளனர் –…
இதுவரை குறைந்தபட்சம் 500 உக்ரேனிய குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு…