அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
விடுமுறையைத் தொடர்ந்து பெண்கள் இன்றி மீண்டும் திறக்கப்பட்ட ஆப்கான் பல்கலைக்கழகங்கள்
குளிர்கால விடுமுறையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் ஆண் மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர், ஆனால் ஆளும் தலிபான்களால் பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து பெண்கள் மீது விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளில் பல்கலைக்கழகத் தடையும் ஒன்றாகும், மேலும்…
கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்…
வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்களை விற்ற விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. போலீஸார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான்…
உக்ரைன், ரஷியா போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல்…
நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது. 3-ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு என்றார் டிரம்ப். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா, உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர்…
அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சி: ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் –…
அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியினை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தி உள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் தென்கொரியா நாடானது அமெரிக்காவுடன் இணைந்து 10 நாள் கூட்டுப்போர் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அப்போது நீண்ட தூரத்தில் குண்டுகளை வீசுவது, போர் விமான பயிற்சி…
பள்ளி மாணவிகளுக்கு விஷம் – எதிரிகளின் சதி திட்டம் என…
பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தை “எதிரிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விமர்சித்துள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி,…
பிலிப்பைன்ஸ் ஆளுநரை கொன்ற சந்தேக நபர் கொலை, மூவர் கைது
மத்திய பிலிப்பைன்ஸ் மாகாண ஆளுநர் மற்றும் அரசியல் தலைவரிடம் உதவி கோரிய ஏழை கிராம மக்கள் உட்பட எட்டு பேரைக் கொன்ற வெட்கக்கேடான துப்பாக்கிச் சூட்டில் ஒரு சந்தேக நபரைக் கொன்றதுடன் மேலும் மூவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். நீக்ரோஸ் ஓரியண்டல் கவர்னர் ரோயல் டெகாமோ…
கிரீஸில் ரயில் விபத்து எதிரொலி, வெடித்தது மக்கள் போராட்டம்
கிரீஸில் பயணிகள் ரயிலுடன், சரக்கு ரயில் மோதி 43 பேர் பலியான நிகழ்வு, அந்நாட்டு மக்களை போராட்டத்தில் இறங்க வைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் , எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்து…
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி, ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும்…
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எனவே உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனிடையே அரசு ஊழியர்களின் சம்பளம்…
கோவிட்-19 நோய்ப்பரவலைத் தடுப்பதில் மெத்தனம்? இத்தாலிய முன்னாள் பிரதமர் மீது…
இத்தாலிய முன்னாள் பிரதமர் ஜுசெப்பி கான்ட்டே (Giuseppe Conte) நீதித்துறை விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். 2020இல் கோவிட்-19 நோய்ப்பரவல் தொடங்கியபோது அதனைக் கான்ட்டேயின் அரசாங்கம் கையாண்ட விதம் குறித்துப் புகார்கள் எழுந்தன. 2018இல் இருந்து 2021 வரை அவர் பிரதமராக இருந்தார். அப்போது நோய்ச்சம்பவங்கள் கணிசமாகப் பரவுவது தெரிந்திருந்தும் அதனைக்…
போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை நோக்கி 25 போர் விமானங்களை…
தைவானை நோக்கி 25 போர் விமானங்களை சீனா அனுப்பியதால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில்…
ரஷியாவில் அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்: எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர்…
டிரோன் தாக்குதல்களுக்கு பிறகு உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷிய பகுதிகளில் அவ்வப்போது 'டிரோன்' தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த…
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் அங்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவி வருகின்றன. ஐ.எஸ். கோரசான் என்று அழைக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நாடு முழுவதும்…
செல்போனில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்குங்கள், டென்மார்க் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றம்…
டென்மார்க் நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் செல்போனில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. சீனாவின் டிக்-டாக் செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அந்த செயலியை முழுமையாக தடை செய்துள்ளன. அதே போல் அமெரிக்கா…
வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை
வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக்…
துருக்கி நிலநடுக்கம்: கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது…
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின.…
சீனா தனது செல்வாக்கை மேம்படுத்த வளரும் நாடுகளின் பாதுகாப்பு பணியாளர்களுக்கு…
இலங்கை உட்பட்ட வளரும் நாடுகளை சேர்ந்த சுமார் 5000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு சீனா பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் சவுத் மோர்னிங்கில் வெளியிடப்பட்டுள்ள பீய்ஜிங்கின் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சீனா தனது உலகளாவிய செல்வாக்கை மேம்படுத்த குறைந்தது அடுத்த 5…
ஈரானில் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம் வைத்த மத…
ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.…
தைவானுக்குக் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பத் திட்டமிடும் அமெரிக்கா
தைவானில் இன்னும் கூடுதலான அமெரிக்க ராணுவ வீரர்களைப் பணியமர்த்தத் திட்டமிடப்படுகிறது. சீனாவுடனான பதற்றம் அதிகரிக்கும் வேளையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வரும் மாதங்களில், தைவானில் அமெரிக்கத் துருப்பினர் 200 பேர்வரை பணியமர்த்தப்படலாம் என்று வால் ஸ்ட்ரீட் நாளேடு தெரிவித்தது. கடந்த ஆண்டு தைவானில், அமெரிக்கத் துருப்பினர் 30 பேர்…
சவுதியை தொடர்ந்து இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த ஓமன்…
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழவி வந்த மோதல் போக்கு மெல்ல மெல்ல தணிந்து வருகிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், சூடான், மொராக்கோ போன்ற அரபு நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தமும், தூதரக உறவை தொடங்கவும் ஒப்பந்தம் செய்துகொண்டது. இது இஸ்ரேல்-அரபு…
அணுவாயுதங்கள் வேண்டாம், சமரசப் பேச்சில் ஈடுபடுங்கள் – ரஷ்யா, உக்ரேனிடம்…
உக்ரேனையும் ரஷ்யாவையும் உடனடியாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமெனச் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்ய-உக்ரேன் போரின் ஓராண்டு நிறைவு இன்று (24 பிப்ரவரி) அனுசரிக்கப்படும் நிலையில் அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ரஷ்யாவும் உக்ரேனும் ஒரே இலக்கை நோக்கிச் செயல்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்கவேண்டும், என்று அது குறிப்பிட்டது. பூசலில் அணுவாயுதங்களைப்…
வட அமெரிக்காவை வதைக்கும் கடும் பனிப்புயலால் விமானச் சேவைகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவிலும் கனடாவிலும் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் வட அமெரிக்காவில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் தடைபட்டன. அதனால் ஆயிரக் கணக்கான பயணிகள் பயணத்தைத் தொடரமுடியாமல் தவிக்கின்றனர். கனடாவில் கடுங்குளிருக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெயில் அதிகம் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles)…
ரஷியாவால் உக்ரைனை வீழ்த்த முடியாது – ஜோ பைடன் உறுதி
ரஷியாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிபட தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷியா போர் நாளை (வெள்ளிக்கிழமை) ஓர் ஆண்டை நிறைவு செய்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர்…
பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான், 700 மில்லியன் டாலர் கடன்…
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது. மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார…