தைவானுக்குக் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பத் திட்டமிடும் அமெரிக்கா

தைவானில் இன்னும் கூடுதலான அமெரிக்க ராணுவ வீரர்களைப் பணியமர்த்தத் திட்டமிடப்படுகிறது.

சீனாவுடனான பதற்றம் அதிகரிக்கும் வேளையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

வரும் மாதங்களில், தைவானில் அமெரிக்கத் துருப்பினர் 200 பேர்வரை பணியமர்த்தப்படலாம் என்று வால் ஸ்ட்ரீட் நாளேடு தெரிவித்தது.

கடந்த ஆண்டு தைவானில், அமெரிக்கத் துருப்பினர் 30 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

தைவானின் ராணுவத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சித் திட்டம் ஒன்றின் விரிவாக்கத்துக்காக அமெரிக்கத் துருப்பினர் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

சீனா உள்ளிட்ட வெளிப்புற அச்சுறுத்தல்களைக் கையாள்வது பயிற்சித் திட்டத்தில் அடங்கும்.

-sm