அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெஷாவர் நகரின் சர்பந்த் பகுதியில் உள்ள பாட்டா டால் பஜாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட இருவரும் அப்பகுதியில் கடைகள் வைத்திருந்த சல்ஜீத்…
புதிய திட்டத்திற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின்…
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை…
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின்…
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக்…
ரஷியாவிற்கு உதவ வேண்டாம்- சீனாவுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தல்
உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுவதாக ஜி7 கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச…
கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி –…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46). டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார். கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்காக 198…
பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி…
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிதி நெருக்கடியில்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார். இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம்…
டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்
உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதற்கான பணியையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், டுவிட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால்,…
வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி: தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர்
சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக…
திடீரென மயக்கமடைந்த பைலட் – பயணி செய்த மகத்தான காரியம்
வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு பஹாமா. அங்கிருந்து 2 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா நகருக்குச் சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் பைலட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் அவர் மயக்கம் அடைந்தார். இதைப் பார்த்த பயணி ஒருவர்…
பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணியவேண்டும் – தலிபான்களுக்கு…
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று கடுமையான ஆட்சி இருக்காது என தலிபான்கள் உறுதி…
கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு…
உலகமெங்கும் கொரோனாவை பரப்பிய சீனா, தற்போது அந்த தொற்றின்பிடியில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலையில் அங்கு ‘ஜீரோ கோவிட்’ கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது. ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் இதன் நோக்கம் ஆகும். இதற்காக கடுமையான ஊரடங்குகள், பொது முடக்கங்கள் ஷாங்காய்,…
ஹிட்லரை விட ஆபத்தானவர் புதின்: போலந்து பிரதமர்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி ‘தி டெலகிராப்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர், “புதின், ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின்…
விமான பயணத்தில் இனி மாஸ்க் கட்டாயமில்லை: ஐரோப்பா ஒன்றியம் அறிவிப்பு
கொரோனா பரவல் தொடங்கி கிட்ட இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்புகள் உலகம் எங்கும் படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் மாஸ்க் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும்…
உக்ரைனில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான மக்கள் உயிரிழப்பு- ஐநா அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு 77-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் பொதுமக்களில் இதுவரை 3,381 போ் உயிரிழந்ததாக அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் போரில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தெரிவித்துள்ளது.…
பாகிஸ்தானில் சர்க்கரை ஏற்றுமதிக்கு முழு தடை: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான்…
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட்…
மெக்சிகோவில் துணிகரம் – மேலும் 2 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை
மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். யெஸ்சினியா மொலிண்டோ பால்கனி, ஷீலா ஜோஹானா கார்சியா ஒலிவரா ஆகியோர் ஆன்லைன் மீடியாவில் இயக்குனர் மற்றும் நிருபராக வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. நடப்பு ஆண்டில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற 10 மற்றும்…
நைஜீரியாவில் இருந்து பிரிட்டன் வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு-…
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், நைஜீரியா நாட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் ஆகும். சமீபத்தில் நைஜீரியா சென்று வந்தவருக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத் துறை அதிகாரிகள்…
கொரோனாவுக்காக தொழில் நகரங்கள் முடக்கம் எதிரொலி: சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா திகழ்ந்து வருகிறது. ஆனால், கொரோனா மீண்டும் தலைதூக்கி இருப்பதால், சீனாவின் வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 27 ஆயிரத்து 360 டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன்…
இரண்டாம் உலகப் போரில் அடைந்ததை போல உக்ரைன் போரில் வெற்றி…
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச படை தோற்கடிக்கப்பட்டதன் 77வது ஆண்டு நினைவு நாளில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்து ரஷிய அதிபர் புதின் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “நம் நாட்டு வீரர்கள், நாசிச அசுத்தங்களிலிருந்து தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்க,…
எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலி
எகிப்தில் சூயஸ் கால்வாயின் கிழக்கே நீரேற்றும் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு அதிகாரி, 10 வீரர்கள் என, பாதுகாப்பு படை தரப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.…
உக்ரைனில் உருக்காலையில் இருந்து அனைத்து பொதுமக்களும் வெளியேற்றம்
ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து போய் உள்ளது. சில நாட்கள் முன்பு அந்த நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்தது. மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர். சரண் அடைய ரஷியா விடுத்த உத்தரவை…