அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
ரஷிய தூதர்களை வெளியேற்ற ஜெர்மனி, பிரான்ஸ் முடிவு
உக்ரைன்-ரஷியா போர் 41-வது நாளாக நீடிக்கும் நிலையில், மைக்கோலைவ் நகரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புச்சா நகரில் ரஷிய படைகள் நிகழ்த்திய படுகொலைகளுக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை வெளியேற்ற ஜெர்மனி அரசு…
ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு
சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் தத்தளிக்கிறது. 2 கோடியே 60 லட்சம் பேர் வாழும் இந்த நகரில், தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. நேற்று ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா உறுதியானது. 7,788…
பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்: தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், அது…
புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் – ஐ.நா.பொது செயலாளர்…
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 40-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை. குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ரஷிய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை நடத்தியது. ரஷிய…
உலகளவில் எரிவாயு, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு புதின்தான் காரணம்-…
உக்ரைன்- ரஷியா இடையே இன்று 38வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்தான் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து…
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- பிரிட்டன் சுகாதார…
சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியில் பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கொரோனா உருமாற்றம் அடைந்த நிலையில் டெல்டா மற்றும் ஒமைரான் வைரஸாக பரவியது. இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டன்…
ரஷிய தாக்குதலால் சேதமடைந்த உக்ரைனின் கலாசார சின்னங்கள் – யுனெஸ்கோ…
உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன்…
கனடா பள்ளிகளில் நடந்த அநியாயத்துக்காக மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்
கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். அந்தப் பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இந்த அநியாயத்துக்காக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். வாடிகனில்…
தென்கொரியாவில் நடுவானில் விமானப்படை விமானங்கள் மோதல்: 3 விமானிகள் பலி
தென்கொரியா கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் போராடி வருகிறது. தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் விமானப்படையின் இரு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காக நேற்று புறப்பட்டு சென்றன. இவ்விரு விமானங்களும் கேடி-1 பயிற்சி விமானங்கள் ஆகும். இவ்விமானங்கள்…
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தென் ஆப்பிரிக்கா தொற்று நோய் களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட…
சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது…
சீனாவில் பிறந்த பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சீன போலீசாரால் கைது செய்யப்படுகிற வரையில், அங்கு சீன அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’னில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில் நாட்டின் ரகசியங்களை சட்ட விரோதமாக வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது கைது நடவடிக்கையில்,…
பாகிஸ்தானில் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதை ஆதரிக்கிறோம்- அமெரிக்கா விளக்கம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதையடுத்து பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், தம்மை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட்…
ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து: உலக நாடுகளுக்கு…
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கூறி உள்ளார். இன்று (ஏப்ரல்-1) முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்காக…
செர்னோபில் அணு உலையில் இருந்து வெளியேறும் ரஷிய படைகள் –…
உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷியா முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இது தொடர்பாக உக்ரைன் அரசு கூறுகையில், செர்னோபில் அணு உலையை ரஷியா ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான…
அமெரிக்காவில் ஒமைக்ரான் துணை வைரஸ் ஆதிக்கம்
அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது. ஒமைக்ரானை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1 வைரசை விட 30 சதவீதம் அதிகமாக…
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3…
மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான அகாபுல்கோவில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. 9 பேர் அமரக்கூடிய இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணித்தனர். இந்த விமானம் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு 10 கி.மீ.…
கொரோனா அதிகரிப்பு: ஷாங்காயில் கடும் கட்டுப்பாடு- மக்கள் வீட்டை விட்டு…
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள மாவட்டம் புடோங். இந்த மாவட்டத்தில் முன்னணி நிதி நிறுவனங்கள், ஷாங்காய் பங்குச் சந்தை உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதனை செய்ய மட்டுமே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இஸ்ரேல் அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது – பிரதமர் நப்தாலி…
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில்…
கீவ் நகரில் ரஷிய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல்…
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி விரும்பியது. அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை…
புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க…
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன், தலைநகர் வார்சாவில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்ட காலத்துக்கு தொடரக்கூடும். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பெரும்…
இம்ரான் கான் பிரதமர் பதவியில் நீடிப்பாரா? நம்பிக்கையில்லா தீர்மானம் மீது…
பாகிஸ்தானின் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன், இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. நம்பிக்கையில் இல்லா தீர்மானம் தொடர்பாக, கூட்டத்தொடரை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய…
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா- சீனாவில் பல நகரங்களில் ஊரடங்கு அமல்
சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஷாங்காய் உள்பட பல நகரங்களில் மீண்டும்…
அமெரிக்க திரைப்படம் “டியூன்” 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது
சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன. நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கியது. ஹாலிவுட் பவுல்வார்ட் பகுதியில் உள்ள டால்பி திரையரங்கத்தில் விழா நடைபெற்றது. இந்த…