அதிநவீன ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட…

வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24-ந்தேதி சோதித்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இந்த ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக…

ரஷியாவின் முயற்சிகளை முறியடிக்க இதை செய்யுங்கள்… கத்தாருக்கு உக்ரைன் அதிபர்…

கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷியாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது என்றார். மேலும், எரிசக்தியை ஆயுதமாகப் பயன்படுத்தும் ரஷியாவின் முயற்சிகளை…

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா வான்வெளி தாக்குதல் –…

ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும்…

பெண்கள் பள்ளிகள் மூடல் எதிரொலி – தோஹாவில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை…

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதையடுத்து, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இரு மாதத்துக்கு பின் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, புதிய கல்வியாண்டு…

போரை மே 9-ந்தேதிக்குள் முடிக்க ரஷியா திட்டம்- உக்ரைன் ராணுவம்…

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது. இன்று 30-வது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை இடைவிடாமல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டை மூன்று முனைகளில் ரஷிய படைகள் சுற்றி வளைத்து…

ஒமைக்ரானின் பி.ஏ.2 மாறுபாடு ஆதிக்கம்: அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் பரவியது. மிகவும் பரவும் தன்மை கொண்ட இந்த வைரசால் உலகளவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அமெரிக்காவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியது. இதற்கிடயே ஒமைக்ரானின் துணை வகைகளாக பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 வைரஸ்களும் பரவியது. இதில் பெரும்பாலான நாடுகளில் பி.ஏ.1…

ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் –…

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

கீவ் நகரில் பின்வாங்கியது- பதுங்கு குழிகளை அமைத்து தற்காப்பை பலப்படுத்தும்…

உக்ரைன் மீது ரஷியா படைகள் நடத்தி வரும் தாக்குதல் இன்று 29-வது நாளை எட்டியுள்ளது. ஒரு மாதமாக தொடர் தாக்குதலை சந்தித்து வரும் உக்ரைனின் நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கீவ் புறநகர் பகுதிகளை ரஷிய படைகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்து…

வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது- தென்கொரியா…

வடகொரியாவின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக பாலிஸ்டிக் ஏவுகணை கருதப்படுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. அதன்படி, இன்று வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த…

உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்- நேட்டோ கணிப்பு

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 28-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷிய ராணுவம், தலைநகர்  கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு  உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது. எதிர்பார்த்ததை…

விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது. அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உள்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. குவாங்சி மாகாணத்தில் உள்ள…

ரஷியாவில் இருந்து வெளியேறுங்கள்- பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார். அவ்வகையில், உக்ரைன் அதிபர்…

புதினுடன் நேரடியாக பேச தயார்: உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நேட்டோ அமைப்பை பொறுத்தமட்டில் எங்களை என்ன செய்வது என்று தெரியாத மேற்கத்திய நாடுகள், பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்பும் உக்ரைன், நேட்டோ விரிவாக்கத்தை விரும்பாத ரஷியா என…

ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது – செர்பிய…

உக்ரைன் மீது ரஷியா 27வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்தமாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு…

அமெரிக்காவில் ஒமைக்ரானை விட 60 சதவீதம் வேகமாக பரவும் புது…

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்த நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அமெரிக்காவிலும் ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஜனவரி மாதம் பரவியது.…

ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி –…

ஆப்கானிஸ்தானில் அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பள்ளிகளும் இந்த வாரம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி அனைத்து வகுப்புகளிலும் பெண் குழுந்தைகள் கல்வி பயில அனுமதிக்கப்படுவார்கள். புதன்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். கல்வி அமைச்சகம் அதன்…

சீன விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்து விட்டதாக தகவல்…

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று சென்றபோது விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் மொத்தம் 133 பேர் இருந்ததாக முதலில் தகவல் வெளியானது. தற்போது 123 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் உட்பட 132…

கீவ் வணிக வளாகத்தை இரவோடு இரவாக தகர்த்த ரஷிய படை-…

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 26வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷியா, தலைநகர் கீவ் மற்றும் மரியுபோல் நகரங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சூப்பர்சோனிக்…

உக்ரைன்- ரஷியா போருக்கிடையே போலந்து செல்கிறார் ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஹைப்பர்சோனிக் உள்ளிட்ட பயங்கரமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ நாடு தலைவர்கள், ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திப்பதற்காக…

மரியுபோல் நகரில் சரணடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: உக்ரைன் திட்டவட்டம்

உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. பொதுமக்கள் இறந்த வண்ணம் உள்ளனர். அங்கிருந்து வெளியேற முடியாமல்…

ஆசியா-ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இதனால் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் 3-ம்…

உக்ரைனில் 847 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு…

உக்ரைன் மீது ரஷியா  நடத்தி வரும் தாக்குதல் 25-வது நாளாக நீடிக்கிறது. மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா, வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில்,  உக்ரைனில் மார்ச் 18ஆம் தேதி வரை குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும்,…

நார்வேயில் விமான விபத்து- அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலி

நார்வேயின் போடோ நகரின் தெற்கில் உள்ள பெயார்னில் நேட்டோ கூட்டுப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நார்வே பிரதமர்…