அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
கார்கிவில் கண்ணிவெடிகளை அகற்றத் தொடங்கிய உக்ரைன் அதிகாரிகள்
உக்ரைன் மீது ரஷியா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கிவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த…
பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் – இம்ரான்கான் வலியுறுத்தல்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். புதிய பிரதமராக…
மாஸ்கோவில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை விடுவிக்க வேண்டும் –…
ரஷியா அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸ் நவால்னி இரண்டரை ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அரசை விமர்சிப்பவர்கள் நாடு முழுவதிலும் தடுத்து வைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சமூக சேவகரும், எதிர்க்கட்சியை சேர்ந்தவருமான விளாடிமிர் காரா முர்சா தடுப்புக்…
பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமர் தேர்வு போட்டியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ்…
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 62 லட்சத்தைத் தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.…
பிரான்ஸ் பாராளுமன்ற அதிபர் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே, அதிபர் தேர்தலில் இரண்டாவத் முறையாக போட்டியிட உள்ளேன் என அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்தார். புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல்…
தென் கொரியாவில் கொரோனா ஆதிக்கம் சரிவு
ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது உண்டு. இந்த நிலை இப்போது மாறி வருகிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.…
ஹஜ்ஜு கட்டுப்பாடுகள் தளர்வு
சவூதி அரேபியா கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதால் ஒரு மில்லியன் பேர் வரை இவ்வாண்டு ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவில் கடந்த ஈராண்டுகளாகக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இப்போது புனிதப் பயணம் மீண்டும் வெளிநாட்டவருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி முழுமையாகத் தடுப்பூசி…
பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது – பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு…
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது. இந்த வழக்கை…
கீவ் நகரில் உக்ரைன் அதிபரை சந்தித்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ்…
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷியா, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி…
பதவி விலகல் குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்! – நிமல்…
பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் மூலம் மாத்திரமே பதவி நீக்க முடியும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்புக்கு மாற்று எதுவும் இல்லை எனவும், மக்கள்…
கனடாவில் ஜோம்பி நோய்- மூளை செயலிழந்து கொத்து கொத்தாக மடியும்…
கனடாவில் மான்களை தாக்கக்கூடிய விசித்திரமான மற்றும் தொற்று நோயான ஜோம்பி நோய் பரவி வருகிறது. கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்வெசன் ஆகிய மாகாணங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின்படி, இந்நோய் மான், மான் வகைகளான எல்க், கலைமான், சிகா மான் மற்றும்…
உக்ரைனுடனான போரில் ரஷியா தோல்வியடைவதை பார்க்க விரும்புகிறோம் – அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும்…
விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை –…
94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின்…
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம்- உக்ரைன்…
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டு படையினர் உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதி மற்றும் புச்சா நகரில் அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்ததற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து…
இஸ்ரேல் நாட்டில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் உயிரிழப்பு, 8…
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இச்சிலோவ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.…
கடைசி பந்து வரை போராடுவேன்- பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து…
பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை இம்ரான்கான் அரசு சந்திக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமது கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், மேலும் தமது அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் பாகிஸ்தான்…
உணவுக்காக தவிக்கும் 2.6 கோடி ஷாங்காய் மக்கள் – மீண்டும்…
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளதால், அங்குள்ள சுமார் 2.6 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். உலகளவில் கொரோனா பெருந்தொற்று தாக்கம் தற்போது ஓய்ந்துள்ள நிலையில், சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும்…
ரஷ்யா தாக்குதல்: குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க…
ரஷ்ய தாக்குதலில் கொல்லப்படலாம், அல்லது குழந்தையை பிரிந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தங்கள் குழந்தைகளின் உடம்பில் குடும்ப விவரத்தை உக்ரைன் தாய்மார்கள் எழுதிவைத்து வருவது மனதை கனக்க செய்துள்ளது. உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக அந்நாட்டின் மீது…
ஹாங்காங்கில் கொரோனா பயங்கரம்!- 24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடுகள்-…
ஹாங்காங்கில் பாரம்பரிய மர சவப்பெட்டிகள் குறைவாக இருக்கின்றன. கோவிட்-19 ஹாங்காங்கை உலுக்கி வருகிறது. சவக்கிடங்குகளில் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால் ஈமச்சடங்கு செய்யும் மயானங்களிலும் கல்லறைகளிலும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. "இவ்வளவு உடல்கள் ஒன்றாக குவிந்து கிடப்பதை நான் பார்த்ததில்லை," என்று 37 வயதான இறுதிச்சடங்கு இயக்குனர் லோக்…
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா…
ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக…
ரஷிய படைக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை –…
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று காணொலியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ரஷ்ய துருப்புக்கள் செய்த அட்டூழியங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து வேறுபட்டவை அல்ல. கிரெம்ளின் படைகளை போர் குற்றங்களுக்காக நீதியின் முன் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்ய ராணுவம் உக்ரைன்…
பெரு நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் – ஊரடங்கு…
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை பல்வேறு நாடுகளில் உயர்ந்துள்ளது. இதனால், உலக நாடுகள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதற்கிடையே, பெரு நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள்…