சவூதி அரேபியா கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதால் ஒரு மில்லியன் பேர் வரை இவ்வாண்டு ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியாவில் கடந்த ஈராண்டுகளாகக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இப்போது புனிதப் பயணம் மீண்டும் வெளிநாட்டவருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதன்படி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்வாண்டு மெக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
Tamilmurasu