பாலேக் பூலாவ் White Resort முகாமைச் சீர்படுத்துமாறு அதன் இயக்குனருக்குத் தேசிய சேவை பயிற்சித் துறை (பிஎல்கேஎன்) உத்தரவிட்டுள்ளது.
“அதனைச் சுத்தப்படுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என பிஎல்கேஎன் தலைமை இயக்குனர் ரொசைனோர் ரம்லி கூறினார்.
இன்று பிற்பகல் அம்முகாமைப் பார்வையிட்ட அவர், “குறிப்பிட்ட காலத்துக்குள் அதன் சுகாதார நிலையை மேம்படுத்தாவிட்டால் முகாமை மூடவும் தயங்க மாட்டோம்”, என்றார்.
வாசகர்களின் பிள்ளைகள் அந்த முகாமில் இருந்தால், MACC -இடம் புகார் செய்யுங்கள். எவன் எவனுக்கு கமிசென் கொடுத்து அந்த முகாமை வைத்திருக்கின்றான் என்று கண்டு பிடிப்போம்.
ஏன்? அதன் இயக்குனர்கள் சம்பளம் வாங்காமல் வேலை செய்கிறார்களா? இதில் யார் இளிச்சவாயர்கள் நீங்களா அல்லது அவர்களா?
எல்லாம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு தான் அதிகாரிகளுக்கு தெரிகிறது
நாற்றம் அடித்தவுடன் நடவடிக்கை எல்லாமே மண்ணாங்கட்டிகள் .
BN ஆட்சி என்னா மவுசுல போகுது பாருங்க .
இதுதான் இந்நாட்டின் மண்ணின் மைந்தனின் ஸ்பெசாளிட்டி!