மசீச தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒழுங்கு வாரியத்துக்கு உண்டு

1 chuaஅரசாங்கப் பதவிகளை ஏற்கக்கூடாது என்ற கட்சியின் முடிவை  தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மீறினாரா என்பதை விசாரிக்கும் அதிகாரம் மசீச ஒழுங்கு வாரியத்துக்கு  உண்டு.

தன்னிடம் செய்யப்படும் புகார்கள்மீது  வாரியம் விசாரணை மேற்கொள்ளும் என அதன் செயலாளர் பென்சன் பூ கூறினார்.

கட்சியின் அமைப்புவிதிகள் தலைவருக்கு சிறப்புச் சலுகையையோ விதிவிலக்கையோ வழங்கவில்லை என்றாரவர்.

ஆனால், சுவாவுக்கு எதிராக அதிகாரப்பூர்வ புகார் எதையும் இதுவரை பெறவில்லை என வாரியத் தலைவர் மைக்கல் சென் கூறினார்.