தெங் பினாங்கு கெராக்கான் தலைவராவதற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஆதரவு

1-chiaநாளை நடைபெறும் பினாங்கு கெராக்கான் தலைவர் போட்டியில் தம் ஆதரவு தெங் சாங் இயோவுக்கே என அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சியா குவாங் சை, வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

பினாங்கு கெராக்கானுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு தெங்குக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றாரவர். அதே வேளையில் தலைவர் பதவிக்குப் போட்டி இல்லாதிருப்பதையே அவர் விரும்புகிறார்.

“பல போட்டிகளைச் சந்தித்து விட்டோம்”, என்று கூறிய அவர் போட்டி உறுப்பினர்களிடையே பதற்றத்தையும் ஆத்திரத்தையும் தூண்டி விடுகிறது என்றார்.

பினாங்கு கெராக்கான் தலைவர் பதவிக்கு தெங்கை எதிர்த்து கட்சியின் சட்ட, மனித உரிமை பிரிவின் தலைவரும் துணிச்சலாக கருத்துகளை எடுத்துரைப்பவருமான பல்ஜிட் சிங் போட்டியிடுகிறார்.