-மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 14, 2013.
வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவி ஏற்ற 100 நாட்களில் தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்று அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.
கடைசி நிமிடம் வரை அம்னோவையும் பாரிசான் அரசையும் எதிர்த்து வந்த வேதமூர்த்தி, பாக்கத் தானுடன் பேச்சு முறிவை ஏற்படுத்தி விட்டு, நஜீப்புடன் கூட்டு சேர்ந்து 32 அம்ச கோரிக்கையில் கையொப்பமிட்டார்.
100 நாட்கள் ஆகியும் அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார். எதை நான் ஏற்கனவே பலமுறை பத்திரிகை வாயிலாக வேதமூர்த்தியிடம் சொன்னேனோ அது இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.
சொந்த அண்ணனை ஜெயிலிலிருந்த்து விடுவிக்க முடியாத வேதமூர்த்தி எப்படி 2 மில்லியன் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறார்?
கண்ணாடிக் கூண்டில் இருந்து கொண்டு கல் எறிவது போல, வேதமூர்த்தியின் நடவடிக்கை கடந்த 100 நாட்களாக இருந்து வந்திருக்கின்றது. அதற்காக அவர் நன்றாக .அம்னோகாரர்களிடமிருந்து வாங்கியும் கட்டிக் கொண்டார். தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், உள்நாட்டு அமைச்சர் சாஹிட் ஹாமிட், கடைசியாக பிரதமரும் அவரை வன்மையாகக் கண்டித்துள்ளனர். எங்களுடம் ஒத்துழை, இல்லையேல் வெளியேறு என்று அந்த மூவரும் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.
கூடா நட்பின் வழி இந்தியர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கும் வேதமூர்த்தி அவரின் கற்பனை கனவுலகிலிருந்து நிஜ உலகிற்கு மீண்டும் வரவேண்டும்.
முதல் வேலையாக தன் சகோதரரை சிறையிலிருந்தது மீட்க தன்னுடைய செல்வாக்கை (மிச்சம் ஏதேனும் இருக்குமானால்) பயன் படுத்த வேண்டும். இதுவே அவர் இந்தியர்களுக்கு செய்யும் மகத்தான சேவையாக கருதப்படும். இதில் வெற்றி கண்டால் மட்டுமே அவரின் பலத்தை மக்கள் மதிப்பீடு செய்ய முடியும்.
எனக்கும் உதயகுமாருக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஓர் இந்தியன் என்ற முறையிலும், எங்களின் இறுதிக் குறிக்கோள் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலர்ந்து எல்ல குடிமக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்று இருப்பதாலும் அவரின் விடுதலையை நானும் கோருகிறேன்.
தம்பி பணிந்ததால் அவனுக்கு அரியணையும் அண்ணன் எதிர்த்ததால் அவனுக்கு சிறையும் தந்த இந்த பாரிசான் அரசு காலனித்துவ ஆட்சியில் வெள்ளையன் செய்த பிரித்தாளும் சூழ்ச்சியையே நமது இந்தியர்கள் விடயத்திலும் கடைபிடிக்கின்றது.
உண்மையில் இந்திய சமூகத்தின் வாக்குகளுக்காவே தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களில் பாரிசான் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வேதமூர்த்தியுடன் செய்து கொண்டது. அது வெறும் வெத்துக் காகிதம்தான் என நானும் பலரும் கூறிய போதும் நம்பாத வேதமூர்த்தி இப்பொழுது முழித்துக் கொண்டிருக்கின்றார்.
இன்று மலாய்க்கார்களுக்கென 10 பில்லியன் ரிங்கிட்டுடன் சிறப்பு அமான சஹாம் புமிபுத்ரா 2 ஐ அறிவித்த பிரதமர் நஜிப், நினைத்திருந்தால் இந்தியர்களை கறையேற்ற அதில் பத்தில் ஒரு பங்கையாவது எப்போதோ ஒதுக்கியிருக்கலாம். இதை அவர் செய்யமாட்டார் என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆகவே, வேதமூர்த்தி தன்மானமுடையவரென்றால் உடனடியாக தன் பதவியைத் துறக்க வேண்டும்.
குலா உங்களை போன்று சிறைவாசத்திற்கு அஞ்சியவரில்லை உதயகுமார். அந்த மாவீரனின் பெயரை சொல்லி அரசியல் லாபம் தேடுவதை முதலில் நிறுத்துவோம்.
*நிறுத்துங்கள்.
பேரா மாநிலத்தில் 11 மாதம் ஆட்சி புரிந்த உங்கள் கட்சி இந்தியர்களுக்கு என்ன செய்தது? 100,000 சீனர்களுக்கு நிலப்பட்ட வழங்க முடிந்த உங்களால் இந்தியர்களுக்கு ஏன் வழங்கமுடியவில்லை? அதற்கு நீங்கள் சொன்ன பதில் இன்னும் நினைவில் இருக்கிறதா அன்பரே? 11 மாதம் மிக குறிகிய காலம் அதனால் செய்ய முடியவில்லை என்பதாகும். உங்களுக்கு 11 மாதம் குறிகிய காலம், வேதாவுக்கு 100 நாட்கள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டிய காலமா? அது போகட்டும், பினாங் மாநில அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசு துறையில் எதனை இந்தியர்களை பதவியில் அமர்த்தி உள்ளீர் என்ற தகவலை மட்டும் தருவீர்களா?
குலா ஒன்று சொல்கிறார்,KETTAVAN வேற என்னமோ சொல்கிறான்.
அண்ணனாவது தம்பியாவது ,நான் சொகுசா இருக்கேன் ,நல்ல கிண்டாதிங்க ,நானே கொஞ்சம் வாய திறந்தா வெளிய போன்னு சொல்றானுங்க ,100 நாலாவது 101 நாலாவது .எவன் எப்படி போனா எனக்கு என்னா? ரொம்ப கஸ்தம் பட்டு ,படுத்த படுகையா இருந்து நடிச்சி இந்த பதவிய வாங்குறதுக்கு நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் .நான் விலக மாட்டேன் …….விலக மாட்டேன் ………ஐ ய எம் மந்திரி வேத மூர்த்தி ஸ்பீகிங் நஜிப் ,ரொம்ப டாச்சர் பன்னுரானுங்கோ !எதாச்சும் கொஞ்சம் அரிசி பருப்பு 50 வெள்ளி கையில கொடுத்து நிலமைய சமாளிக்க பாருங்க ……இந்த குல சேகரன் நெலம தெரியாம பழைய கடுப்ப இப்ப கின்டி கிட்டு இருகாரு ,,,,ஐயா குல சேகரன் நான் எதிர்பார்த்தது இன்னும் முழுமையா கைக்கு வந்து சேரலையா ,இப்ப நான் வாய தொறந்தா என்ன கழுத்த புடிச்சி வெளிய தல்லிருவாணுங்க .ப்ளீஸ் கொஞ்சம் கம்முன்னு இருங்க .
அறிக்கை மன்னர் செயலில் புஜயமாக இருக்கிறார் துணை மேயர் பதவி கேட்டார் அப்புறம் சிளிபின் சாலைக்கு பட்டு பெயரை வைக்க வேண்டும் என நிறைவேறாத விசயதுக்கு மலிவான விளம்பரம் தேடிக்கொண்டார் .பட்டு அவர்களின் பெயருக்கு மாசு கற்பித்து விட்டார் என அவரின் நெருங்கிய நண்பர்கள் புலம்பினார்கள் .அவரின் அறிக்கை தமிழ் பத்திரிகை பிரசுரித்து பக்கதை வேனடிகிரர்கள் .அன்றாடம் அவரின் அறிக்கை வண்ட வண்ணம் தொடர்கிரது
100 நாட்களில் எதுவும் செய்யாததால் வேதா பதவி விலக வேண்டும் என்றால், ஒரு தவணை முடித்தும் ராமசாமி இந்தியர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருக்கிறாரே அது எப்படி? குலா எப்போது ராமசாமியை பதவி விலக சொல்ல போகிறீர்கள்?
ஒருவரையொருவர் குறைகூறி நம்மை நாமே படுகுழியில் தள்ளிக்கொள்ள வேண்டாம். இந்தியர் என்ற ஓர் உணர்வோடு ஒன்றிணைந்து உயர வழி காண்போம். இல்லையேல் ஏமார்ந்த
சமுதாயமாய் அடையாளம்கூட இல்லாமல் அழியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை…
சிந்தித்து செயல்படுவோம் அன்பர்களே!!!!
குலா சும்மா சத்தம் போடாதீர் .
நீங்கள் வர வர அறிக்கை மன்னராக விளம்பரம் தேடுகிரீர் ….!
ஒரு தமிழனை தாக்கரதுக்கு இன்னொரு தமிழன் போதும் வேறு இனம் தேவை இல்லை…….!!!!!
வேல் முருகன் ! நீங்கள் அப்படியெல்லாம் சொல்லகூடாது ! ஏன் என்றால் 10 வருடம் கழித்து நீங்களே வேதாவுக்கு ஜால்ரா அடிப்பீர்கள் ! வேதா பல திட்டத்தில் பல மாற்றத்தில் நஜிப் அரசுடன் கையெழுத்து போட்டார் நஜிப்பும் BN அரசும் அவருக்கு தடையாக இருந்தார்கள் என்று சப்பகட்டு செய்வீர்கள் ! அப்படிதானே சாமி வேலு விஷயத்தில் பல்டி அடித்தீர்கள் உண்மையா இல்லையா ?
வேதமூர்த்தி தமிழர்களின் எட்டப்பன் ,,, இவன் பதவி வீட்டு வெளியேறுது நல்லது ,,!எந்த கழுதை வந்தாலும் தமிழனுக்கு எந்த ஒரு லாபமும்கிடையாது….தமிழன் ஜே போடுவதில் பலே கில்லாடி
டேய் மூடப் பயல்களா இன்னுமா வேதாவுக்கு ஆதரவு கொடுக்கிறேங்க??? பயல்களா…..!!!!
தமிழர் நந்தா நீர் கொஞ்சம்……….!!!!!!
இவன் ஒரு ……………..!!!!!!!!!!!!
வேறு கோணத்தில் பார்ப்போமே. இதுநாள் வரை வெறும் தலையாட்டி பொம்மைகளாய் செயல்பட்டு வந்த, நமது இனத்தையே பல கூறுகளாக்கிப் போட்ட அரசியல் தலைவர்கள் பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் (அரசாங்க மானியங்கள் கூட கிடைக்காமல்) அல்லாடுகின்றனர்.. தொடர்ந்து செயல்படுவார்களா என்பதும் சந்தேகமே. அப்படிப் பட்டவர்கள் எல்லோரும் வேதமூர்த்திக்கு இன்று மேல் இடத்தில் இருக்கும் செல்வாக்கு கண்டு அவர் வால் பிடித்து சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே நிறைய பேர் தூண்டில் போட்டுக் கொண்டிருப்பதாகக் கேள்வி). பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு நாடாளமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு இதுநாள் வரையில் இந்நாட்டு இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றிய சேவைகளை பட்டியலிட துணிச்சல் இல்லாத குலசேகரன் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியை தனிப்பட்ட முறையில் சாடுவது அவரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. மலேசிய இந்தியர்களுக்காக தான் மேற்கொண்டுள்ள கடமையின் அடைவு நிலை குறித்து தைரியமாகவும் வெளிப்படையாகவும் ஹிண்ட்ராப் 100 நாள் அடைவு நிலை அறிக்கையை அம்பலப் படுத்தியது. ஹிண்ட்ராப் அடைவு நிலையோடு ஒப்பிடும் போது குலசேகரன் அவருடைய அடைவு நிலையை ஒப்பிட்டு அறிக்கை விடவேண்டுமே தவிர , மதி கலங்கியவர் போல் வேதமூர்த்தியின் குடும்ப விசயத்தில் மூக்கு நுழைப்பது சிறுபிள்ளை தனமானதாகும்.
குலசேகரன் தமது இத்தனை ஆண்டு அரசியல் வாழ்வில் ஒரு முறைக் கூட அவரின் சாதனைகள் குறித்து அடைவுநிலை அறிக்கை வெளியாக்கியது இல்லை. ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்கு கேட்டு கையேந்தும் சராசரி அரசியல் வாதிதான் இந்த குலசேகரன். தமது கட்சியின் சீன தலைவர்களின் தயவுக்காக கூனி குருகும் குலசேகரனின் சேவை ஊரறிந்த விடையம். அவரின் கையாளாக தனத்தை இவர் வேண்டுமானால் மறைத்து தமது சோடை போன தலைமைத்துவம் குறித்து பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த அவசியம் வேதமூர்த்திக்கோ ஹிண்ட்ராப் அமைப்புக்கோ சற்றும் கிடையாது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் தற்கால நிலை குறித்து அறிக்கை வெளியாக்கும் தைரியம் ஹிண்ட்ராப் அமைப்புக்கு மட்டுமே உள்ளது என்று மக்கள் பாராட்ட துவங்கி விட்டார்கள், மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் பதவியை தூக்கி எரியும் துணிச்சல் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கு இருக்கிறது. ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது ஹிண்ட்ராப் அமைப்பே தவிர பதவிக்காக அடி வருடும் குலசேகரன் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும். பூத கண்ணாடி கொண்டு இல்லாத குறைகளை கூறி அரசியல் நடத்துவதை விடுத்து குலசேகரன் அவரின் சாதனைகள் என்று ஏதாவது இருந்தால் அது குறித்து அறிக்கை விடட்டும். மேலும் குலசேகரன் கிளப்பும் இதுபோன்ற முதிர்ச்சியற்ற, அர்த்தமற்ற கேள்விகளுக்கு வேதமூர்த்தி பதில் அளிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
இந்த நாட்டில் யாருக்கு இந்த துணிவு உண்டு.ஹிண்ட்ராப்க்கு மட்டும்தாம் உண்டு.
ரஜினி கட் அவுட்டுக்கு பாலை ஊற்றும் சங்கத்தின் தலைவர் ”மோகன் ”, கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது !
காமாச்சி அம்மன் ! இவ்ளவு கீழ்த்தரமாக கருத்து சொல்ல கூடாது ! உண்மையில் இந்திய மக்களுக்கு நல்லதை செய்ய நினைத்திருந்தால் ஏன் BN அரசிடம் சேரவேண்டும் ? ஒரு வலிமையான NGO வாக இருந்திருக்கலாமே ? சீன ‘டொங் ஜோங்’ NGO போன்று ! அரசியல் ஆசை வந்து நாறிவிட்டது ஹிண்ட்ராப் ! பாவிங்க, கொம்பையும் விட்டு வாலையும் விட்டு BN னிடம் மண்டியிட்டு கிடக்கிறான் வேதா !
இந்தியர்களை ஏமாற்றிய பக்கத்தானை கேள்வி கேட்க திராணி இல்லாத அரசியல்வாதிகள் இன்று வேதாவை தூற்றி பேசினால்தான் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் இடம் கிடைக்கும் என்று மாறி மாறி அறிக்கை விடுகின்றனர். மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். 100 நாட்கள்தான் ஆகி உள்ளது, ஆனால் அதற்குள் செயல்திட்டம் செயல்பாடு குறித்து ஹிண்ட்ராப் அமைப்பினரே பாரிசானுக்கு நெருக்குதல் கொடுத்துவருகின்றனர் காரணம் அவர்களுக்கு எடுத்த காரியம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அவர்கள் ஓயமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாக்கத்தான் இந்திய தலைவர்கள் நிலை எப்படி? என்ன காரணம் சொல்லி தப்பிக்கலாம் என்று தான் யோசிப்பரே தவிர இந்தியர்களின் நலன் கருதி தலைமைத்துவத்தை பணிய வைக்க முயற்சி செய்ய மாட்டார்கள்.
ரொம்ப துணிவு உள்ளவர்கள்தான்!!! அவனுங்க காலைப் பிடிக்க உடன்பாடு செய்துகொண்டார்களா…….??????
தமிழனை இனி காப்பாற்ற முடியாது……….!!!!!!!!!
இந்தியன் ! எப்போது பக்காத்தான் அரசு மலேசியாவை வழி நடத்தியது என்று சொல்ல முடியும்மா ? மாநில அரசுக்கும் நடுவண் அரசுக்கும் உள்ள அதிகாரம் புரியாமல் கருத்து சொல்லும் விளக்கெண்ணை ! உங்களை போன்ற அரசியல் அறிவு இல்லாத மக்களால் நாடு பின்னோக்கி போகிறது ! நீ இந்தியனா அல்லது மலேசியனா ?
சீனர்களின் ஒற்றுமை.. ஏன் தமிழர்களிடம் உருவாக மாட்டிங்கிறது…ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதை நிறுத்தி விட்டு…சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது பயனுள்ள கருத்துகளை கூறுங்கள்…இப்படி சொந்த இனத்தை கூறுப்போட்டு கொண்டிருக்காதீர்கள்….கட்சிகளால் பிரிக்க பட்டிருந்தாலும்…நமது இன முன்னேற்றத்திற்காவது ஒற்றுமையாக செயல்படுங்கள்…நம் இனத்தை நாமே கேவல படுத்த வேண்டாம் அன்பர்களே……
இந்தியன் எப்பொழுது பாகத்தான் க்கு வாய்ப்பு குடுத்திங்க? அவுங்க இன்னும் ஆட்சிக்கே வரல. அரசியல் அறிவு கொஞ்சம் கூட இல்லாத ஜென்மம் நீ. நீ கண்டிப்பா பாரிசன் வோட்டு.
எதிர் கட்சி MP யின் வேலை, ஆளும் கட்சி சோம்பேறிகளை குடைவதுதான். குலா அதை சரியாகவே செய்கிறார். குல கையெழுத்து போட்டு காரியம் சாதிக்க அவர் அமைச்சர் அல்லவே..
குலா அவர்களே … வேதமுர்த்திக்கு பதவி கொடுத்தது பிரதமர் அவர்கள் … அவர் பதவி வகிப்பது அவர் உரிமை .. உங்க வேலைய நிங்க பாருங்க .. அவர் வேலையே அவர் செய்வர் … எதுக்கெடுத்தாலும் அவரு பதவி விலகனும் ன்னு கத்தறது … முதல்ல ராமசாமியை பதவி விலக சொல்லு … அப்பறம் பாப்போம் …
இந்தியன் அவர்களே ,பாகாதான் இந்தியர்களை ஏமாற்றியதா, ?ஒட்டு BN நணுகு போட்டேங்க்கள ,அதற்க்கு பதிலாக , பெட்ரோல் விலையை ஏற்றிநானே ,அப்பா கூட புத்தி வரவில்லையா ?? ஏமாற்றியது BN !
தமிழர் நந்தா அவர்களே நல்லா கேட்டேங்க ,அவர் இந்தியனும் கிடையாது மலசியனும் கிடையாது ,தமிழனும் கிடையாது ,நாம்தான் தமிழர்கள் திரு நந்தா அவர்களே
வேதமூர்த்தியின் கபட நாடகம் பலே…..!!!!இவன் பின்னாலே தமிழ் சமுதாயம் போனால்….சர்வ நாசம் தான்…..!!!!!
பக்காதான் இந்திய Yb கள் கேள்வி மட்டும் கேப்பார்கள் பிஎன் இந்திய Yb கள் சமாதான விளக்கம் மட்டும் தருவார்கள் இதுதான் 50 ஆண்டு கால இந்தியர்களின் அரசியல் திண்டாட்டம். இவர்களுக்கு YB பதவி கிடச்சா மட்டுumமட்டும் போதுமிலே? ஜஸ்ட் நொண்டி குதிரைகள்…
DAP ஒரு அருமையான கட்சி. பழைய தலைவர்கள் பாடுபட்டு வளர்த்த கட்சி. குறிப்பாக அன்றைய இந்திய தலைவர்களான தேவன் நாயர், பி.பட்டு, வி.டேவிட்,கி ராமன், பெலிக்ஸ் அந்தோணி, ரமேசன், நடராஜா, குப்புசாமி, அரிதாஸ், Dr சூரியன் R .கே. முத்து, சிம்மாதிரி, மாதவன் நாயர், ஜீவி காத்தையா, அசமலை, கனகராஜா, என பட்டியல் நீளும். கூட்டு குடுமபமாக் செயல்பட்டனர். ஆனால் இன்று? DAP யில் இந்தியர்களை வளரவிடாது முட்டுக்கட்டையாக இருப்பவர்தான் இந்த குலசேகரன். இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ம.இ கா.வைச் சேர்ந்தவர்கள். குலா செய்திட்ட நயவஞ்சக காரியங்கள் எண்ணிலடங்கா. உதாரணத்திற்கு ஒன்று. சென்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்றம் எட்டிப்பிடிக்க இருந்த இரண்டு இந்தியர்களை தொலைத்துக் கட்டினார். தெலுக் இந்தான் மனோகரன். இவர் தெலுக் இந்தாநிலேயே நின்றிருந்தால் சுலபமாக வெற்றிப் பெற்றிருப்பார். இவரை தூக்கி கேமரன் மலையில் போட்டு சாகடித்ததில் இந்த குலாவுக்கு பெரும் பங்குண்டு. மற்றொருவர். சிம்மாதிரி. முப்பது ஆண்டுகளாக கெமரன் மலையிலேயே கட்சிக்காக உழைத்திட்டவர். சீனர்களிடம் தனி செல்வாக்கு இவருக்கு உண்டு. இத்தொகுதியில் எளிதாக வெற்றி பெறக்கூடியவர்.. இவருக்கும் வைத்தார் குலா, ஆப்பு. வேதாவையும், ம.இ.கா. வின் இந்தியர்களையும் சதா குடையும் இந்த நயவஞ்சக பேர்வழி, நஜிப்பையும், முகிதீனையும் குடைவதுதானே!
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வித்தாயசம் தெரியாமல் இங்கே எல்லோரும் பேசிகிறார்கள். உலகில் எந்த நாட்டிலும் எதிர் கட்சி உறுபினர்கள் குரல் கொடுக்கதான் முடியுமே தவிர எதையும் செய்யமுடியாது.மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அதிகார பகிர்தலுப்பு நிதி ஒதுகிடு வித்தியாச படும்.குலா அவர்கள் தைரியமாக குரல் கொடுப்பதே நாம் பாராட்ட வேண்டும்.
தமிழன் போர்வையில் குறைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது…..!!!!!
இந்தியர்களுக்கு அநீதி நடக்கிறது என்று கூறும் பக்கதான், தான் ஆளும் மாநிலங்களில் இந்தியர்களின் வாழ்கை தரம் மாற என்ன செய்திருக்கிறது? தங்கள் ஆட்சியில் இருக்கும் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் அரசு துறைகளில் எத்தனை சதவிதம் இந்தியர்களை வேலைக்கு நியமித்துள்ளனர் என்று கூற முடியுமா? இதை எல்லாம் மாற்றுவோம் என்று கூறி இன்று அந்த வாக்குறுதிகளை மறந்து விட்ட பாக்கதான் இந்தியர்களை ஏமாற்றியது என்று கூறுவதில் என்ன தவறு?
இவர்கள் கூரிவருவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது .வேதமுர்தியா தனக்கு இந்த பதவி வேண்டும் என்று அடம் பிடித்தார் .இவருக்கு இந்த பதவியை கொடுத்தது நஜிப் தானே .அப்போதேன்றல் நஜிப் அவர்கள் மீது தானே தவறு உள்ளது .முதலில் நஜிப் -யை பதவியை துறக்க சொல்லுங்கள் .பிறகு இவர்களை விரட்டுவோம் .என்ன சரிதானே .
சிங்கம் அவர்கள் dap கட்சியால் மிகவும் பாதிக்கபட்டவர் போலும் ! எதிர் கட்சிகாரன் சும்மா இருக்காமல் ஏதாவது அறிக்கை விடுகிறானே அதுக்காவது பாராட்ட வேண்டாமா ? சும்மா சும்மா தாக்குவதை நிறுத்தவும் ! எதிர் கட்சி இல்லாத நாடு என்னவாகும் என்று தெரியாதா உனக்கு ?
இந்த வேதமூர்த்தி எல்லாம் நம் சமுதாயதிற்கு ஒரு தலைவனே இல்லை இவன் ஆட்ச்சியில் இருந்து என்ன செய்யபோகிறான்
எப்பொழுது நம் சமுதாயம் முன்னேற ஒரு தலைவன் வரபோகிரரோ என்று தெரிய வில்லை .
திரு ,ராமசாமி ,திரு குலசேகரன் .என்னதான் வாய் கிழிய நம்ப துப்பினாலும்,அறிக்கை விட்டாலும் .மந்திரி வேத மூர்த்திக்கு ஏறவே ஏறாது ,அதைவிட மானாம் ரோசம் எதாச்சும் இருந்தால் தானாகவே அறிக்கை விடுவார் .இவர்தான் எட்டபன்களை வைத்து கொண்டு பத்திரிகைக்கு அறிக்கை விட சொல்கிறாரே !..லண்டன் வழக்கு என்னாச்சுனு கேளுங்களேன் ,அதாவது வழக்கு போட்டு இருக்கிறேன் லண்டன் நீதி மன்றம் முன்பு பத்து கொண்டினர் ரெடியா நிக்கிது ,வழக்கு தீர்ப்பு வந்ததும் அந்த கொண்டினர் நிறைய லண்டன் பணத்தை நிரப்பி மலேசியா இந்திய மக்களின் வீட்டு பீரோவை நிறைக்க போறன்னு சொன்னாலும் சொல்லுவாரு ,அம்னோ மலேசியா தமிழனின் முதல் எதிரி ,பரிசான் இந்திய மக்களை அடிமையா வச்சிருக்கான் ,ம இ கா தமிழர்களை அம்நோவிடம் அடமனாம் வச்சுட்டான் ,பொங்கி எழுவோம் ,யம்மா வாய் கிழிய பத்திரிகை நெறைய பேட்டி கொடுத்த அறிக்கை மன்னன்தான் வேத மூர்த்தி .இப்படி நம்ப வச்சு கழுத்த அறுத்த அறிக்கை மன்னனுக்கு ரோசம் மானாம் சூடு சொரணை எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை !……………….அல்லோ நஜிப் நான் மந்திரி உண்ணா விருத ஆச்சரியர் வேதா பேசுறேன் ,ராமசாமி ,குலசேகரன் தொல்லை தாங்குல ,ப்ளீஸ் என்னை காப்பத்துங்க …..முடிஞ்ச தேர்தலில் நம்ம போட்ட நாடகம் வெளுக்க ஆரம்பிச்சுருச்சு ……….என்னை காப்பத்துங்க …என்னை காப்பத்துங்க …………….என்னை காப்பத்துங்க ..எனக்கு என் மாதிரி பதவி வேணும் ………எனக்கு என் மாதிரி பதவி வேணும் ………
குலா சொல்வது சரி ,அப்படி என்னாத்தை செஞ்சி கிளிச்சி புட்டானுங்க இந்த ஹிண்ட்ராப் காரனுங்க ,,குட்ட கொலப்பிகள்
தமிழர் நந்தா அவர்களே .எதிர்கட்சியில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் பேசுகிறார் .எதிர் கட்சி எதாவது அறிக்கை விடுகிறது என்றே வைடுக்கொளுங்கள் .பிறகு என்னவாகும் பாரிசன் காரர்கள் அது தவறு ,இதுசரீல்லை . என்று பதிலடி கொடுப்பான் .இது உங்களுக்கு தேவையா .ஒரு கட்சி எதாவது தவறு செய்தால்
அதை யார் வீண்டும் என்றாலும் தட்டிக் கெட்டகாலம் .அவர் கட்சியில் உள்ளவர் என்றாலும் சரி .இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் தமிழர் நந்தா அவர்களே !!!!!!!!!!
யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். அவரவர்களுக்கு அறிவு இருக்கிறது இல்லையா அதை கேட்பார் பேச்சு கேட்டு குத்தகைக்கு கொடுக்காமல் நம் இஸ்டத்துக்கு பயன்படுத்தியிருந்தால் நன்மை அடைந்திருப்போம். பி என்-னை கேள்வி கேட்பதற்காக நாம் ஒரு அட்சியை தேர்வு செய்திருக்க வேண்டும் அதில் நாம் ஒற்றுமையைக் காட்டவில்லை அதன் எதிரொலியை நாம் இன்று அனுபவிக்கிறோம். இன்னும் நிறைய அனுபவிப்போம். அப்பொழுதுகூட நம் அறிவு ஆக்கப்பூர்வமாக தெளிவாக யோசிக்காது! ஏன் என்றால் நாம் தான் ஆட்டு மந்தைகளாயிற்றே!!!!!!!!!!
வர வர நம்ம குலா ஒரு அறிக்கை மன்னனா ஆயிட்டாரு………!!!!!!!
தம்பி ! ரொம்ப தெளிவாக புரிந்து கொண்டேன் தம்பி ! ஆனால் நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை தம்பி அருமை தம்பி !
பக்கத்தான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் BN அரசு தமிழ் பள்ளிகளுக்கும் கோயில்களுக்கும் நிறைய செய்ய ஆரம்பித்தது. BN ஒரு இன வாத கட்சி என்று தெரிதும், இந்தியர்களை ஏமாற்றியும் எலும்பு துண்டுகளை போடும் கட்சி என்றி தெரிந்தும் HINDRAF அவர்களை நம்பி மோசம்போனது.
BN நை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம் என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா? ஜம்புலிங்கம், கணேசன் போன்றவர்கள் ஏழை எளிய மக்களுடன் வாழ்ந்தவர்களா? ஒரு தோட்டத் தோழிலாளியின் மகனாகப் பிறந்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களை துன்பங்களை தெரிந்தவர் குலா அவர்கள். இந்தியர்களின் பிரச்சனைகளை துணிந்து தைரியமாக குரல் கொடுப்பதே ஒரு சேவை.
தம்பி நீங்கள் தம்பி என்பதை நிருபித்துவிட்டிர்கள்
ராமசாமி…..குலசேகரசாமி…..சிவநேசன்சாமி…வாய் சொல்வீரர்கள்தான் என்று மக்களுக்கு தெரியும்!
2 தாய்மார் புக்கிட்ராஜா தோட்டத்தில் உரிமைக்காக உயிர்நீத்தார்கள்…..அப்போது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை…..வாய்மூடி மந்தைபோல்…..இருப்பதுதான் சாதனையா!!! இன்னொரு தமிழனை பற்றி கோள் மூட்டிக் கொண்டும், அறிகை விட்டுக் கொண்டும்…. இதெல்லாத்தையும் விட்டுட்டு உங்கள் மாநிலங்களில் தமிழன் உரிமையோடு வாழ உருப்படியா எதையாவது செய்யுங்கள்….!!!