வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது, ஆனால் இது புதிதல்ல.
அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெறுவதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே உத்தியை அவர்கள் கையாண்டுள்ளனர்.
இப்போதும் அதே உத்தியைத் தான் கையாள்கின்றனர்.
ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது அங்கு புலிகள் இல்லை.
இந்த தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.
ஆனால் அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அத்துடன் எந்த நாடும் ஆதரவு கொடுக்கும் என்றும் நான் நினைக்கவில்லை.
குறிப்பாக இந்தியா நிச்சயம் நாடு பிளவுபடுவதை ஒருபோதும் ஆதரிக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டேய் வெண்ண இந்தியா நாடு பிளவு படுவதை ஆதரிக்காது
ஆனால் தமிழர்களை கொன்று குவிக்க ஆதரிக்கும் .உன் அழிவு
காலம் நெருங்கிவிட்டது .
ராஜபக்சவே கேள் ,நாடு என்ற போர்வையில் ,உலக நாடுகளுக்கு தவறான செய்திகளை தந்து எம்மினத்தை அழித்த ரத்தக்கறையின் ஈரம் கூட இன்னும் காயவில்லை ,இந்தியாவின் நிலை மாறும் ,நான் பிறந்த என் இந்திய திருநாடு, உண்மையான ஜனநாயகமும் ,தேசிய ஒருமைப்பாடும் ,இறையாண்மையும் ,மனித நேயமும் உள்ள நாடு என்பது உண்மையானால் , [ தமிழ்ஈழநாடு ] பிறக்கும், இல்லை என்றால் ,எம் இனம் இருக்காது , [ இந்தியர்களே ஆதரவு கொடுங்கள் மலரட்டும் தமிழ் ஈழம் ].