மத்திய மாகாணசபையில் அரசாங்கக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மோதலும் ஏனைய எதிரணிக் கட்சிகளின் போட்டியும் மலையக தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக சுமார் ஒரு மில்லியன் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மைத் தமிழர்களின் வாக்குப்பலம் நுவரெலியா மாவட்டத்திலேயே உள்ளது.
மத்திய மாகாணசபைக்காக தேர்ந்தெடுக்கப்படும் 56 உறுப்பினர்களில் 16 பேரை நுவரெலிய மாவட்ட மக்களே தீர்மானிக்கிறார்கள்.
இந்த 16 பேருக்கான பந்தயத்தில் பலமுனைகளிலிருந்தும் இந்த தேர்தலில் 437 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.
1. மலையகத் தமிழர்களின் அரசியலில் மத்திய மாகாணசபை எந்தளவுக்கு முக்கியமானது?
2. மத்திய மாகாணசபையில் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?
3. இம்முறை மாகாணசபையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்முனைப் போட்டி மலையகத் தமிழர்களின் சுமார் மூன்று லட்சம் வாக்குப் பலத்தை கூறுபோட்டால் அவர்களின் அரசியல் சக்தியின் எதிர்காலம் என்னாகும்?
4. ஆளும் கட்சியினரே மலையகக் கட்சிகளிடத்தில் திட்டமிட்டு மோதல்போக்கை உருவாக்கியுள்ளதாக எதிர்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எந்த அளவு உண்மை?
5. மலையகத்தில் நீடிக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் செல்வாக்கு இந்த தேர்தலிலும் நீடிக்குமா?
6. நுவரெலியாவில் ஆங்காங்கே சிதறிவாழும் முஸ்லிம் வாக்காளர்களை இலக்குவைத்து தமிழ்த் தேசியக் கூட்டணி தனது வேட்பாளரை களமிறக்கியிருப்பது எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தருமா?
7. இந்த தேர்கலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் நுவரெலியா தமிழர்கள் மத்தியில் வாக்குகளைப் பெறமுடியுமா?
8. மத்திய மாகாணத்தில் நுவரெலியாவுக்கு அடுத்தபடியாக தமிழர்கள் செறிந்துவாழும் கண்டி மாவட்டத்திலும் இம்முறை போட்டி கடுமையாகத் இருப்பதன் பலாபலன்கள் எப்படியிருக்கும்?
9. இறுதியாக மலையகத் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் எதிர்காலம் என்ன?
இந்த கேள்விகளுக்கான விடைகளை காணமுயல்கிறார் தற்போது அங்கு சென்றிருக்கும் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி. அவர் தயாரித்து வழங்கியிருக்கும் பெட்டகத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம். -BBC