கதிர்காமத்தில் கந்தன் தோன்றுவார்: ஜோதிடத்தை நம்பி ஏமாந்த மக்கள்

kathirகதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர்.

பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கதிர்காம ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மக்கள் கிரிவெஹர மாவத்தை, அபினவராமய உட்பட பல இடங்களில் குழுமியிருந்தனர். .இதனால் கதிர்காம ஆலய பூமி மக்களால் நிரம்பி காணப்பட்டது.

சாதாரணமாக கிழமை நாட்களில் இப்படி பெருந்தொகையான மக்கள் ஆலயத்திற்கு வருவதில்லை என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். மஞ்சுள பிரிஸின் ஜோதிட எதிர்வுகூறலே பக்தர்கள் அதிகளவில் வருவதற்கான காரணம் எனவும் அவர்கள் கூறினர்.

குழந்தைகளை தூக்கி கொண்டும் அர்ச்சனை பாத்திரங்களை ஏந்தி கொண்டும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

ஆலயத்திற்கு சென்றிருந்த பலர் மஞ்சுள பீரிஸின் ஜோதிட எதிர்வு கூறல் பற்றி கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனினும் கதிர்காம ஆலயத்திற்கு சென்றிருந்த பக்தர்களிடம் விசாரித்த போது தாம் கதிர்காம கந்தனை நேரடியாக எங்கும் காணவில்லை. அத்துடன் கந்தனை கண்ட எவரையும் அங்கு பார்க்க முடியவில்லை என்றனர்.

TAGS: