அன்வார் இப்ராகிம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்மீது எவ்வளவு பகையுணர்வு கொண்டவர் என்பது ஊரறிந்த விசயம்தான். ஆனாலும் , அவர் சாபாவில் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் மகாதிரைத் தற்காத்து பேசினார்.
“ஊடகங்களில் எல்லாவற்றுக்கும் மகாதிர்தான் காரணம் என்று பழி போடுகிறார்கள். அது சரியல்ல.
“அது அவருக்கு முன்னிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்குப் பின்னரும் தொடர்கிறது. ஆனால், அதை நிறுத்த வேண்டும்”.
அன்வார், இன்று சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில் (ஐசிஐ) சாட்சியம் அளித்தார்.
அன்வார், தன்னை தர்காத்துக்கொல்கிறார். 1985ல் சபா மாநில தேர்தலில் பைரின் கிட்டிங்கான் தலைமைலான எதிர்தரப்பு PBS ஆட்சியை கைப்பற்றியது, ஆட்சியாளர் சத்தியப் பிரமாணம் எடுக்க, ஆளுநர் மாளிகையின் முன் இரவுப் பகலாக மூன்று நாட்களாக காத்திருந்தனர் பைரின் கோஷ்டியினர். [இதில் முன்னாள் ஆளுநர் துன் முஸ்தப்பாவும் பைரினுடன் இருந்தார்]. இதற்கிடையில் பல தில்லுமுள்ளகளை செய்து ஆட்சியை துரோகமாக அபகரித்தார், மகாதிர். இதில் அன்வாருக்கும் பெரும் பங்குண்டு என்பதால், வேறு வழியில்லாமல், மகாதிரை தற்காக்கிறார்.
உலகமே ஒரு நாடக மேடை அதில் நாம் நடிகள்கள்.
அன்வாரும் ஒரு கூட்டு மந்திரவாதிதான் என்பது இதன்மூலம் தெரிந்துகொள்வோம். அன்று இன அடிப்படியில் – kadazandusun இனத்தவர்களை கூண்டோடு ஒழித்துகட்ட போட்ட சதித்திட்டம்தான் இந்த விவகாரம். ஒன்றுமட்டும் திண்ணம் , யார் ஆட்சிக்கு vanthaalum நம்மை அந்நியர்களாகவே நடத்துவர் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
தற்காகவில்லை, திரு சிங்கம் . நடந்தவற்றை நாசுக்காக சொல்கின்றார். முன்பு அவர் வெறும் வால்தான். இன்று அன்வர் ஒரு தலை. அதனால்தான் தைரியமாக சொல்கின்றார்
இது கொல்லைப்புறமாக நடந்த பேச்சு வார்த்தையில் வந்த முடிவு. இரண்டும் பேருமே அன்றைய நிலையில் பைரீன் கிட்டிங்கானை எப்படியாவது ஒழித்து கட்டனும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள். ஆகையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் இருவருக்குமே நன்மை என்று இவர் அவர்க்கு வக்காலத்து வாங்கின்றார். அவ்வளவுதான். வளர்த்த கடா என்றாவது ஒரு நாள் மார்பில் பாயும் என்பார்கள். காத்திருங்ககள். காலம் பதில் சொல்லும்.
அன்வாரின் அண்மைய அறிக்கைகளைப் பார்க்கும்போது அன்வாரின் நிலைப்பாடு சறுக்குகிறது…செல்வாக்கும் சரிகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.. பக்காத்தானுக்கு வாக்களித்ததற்காக ஆதரவாளர்களை வெட்கப்பட வைக்காதீர்கள்.