இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது
அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.
ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
ஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.
விபரம்:
யாழ்ப்பாணம்:
தமிழ் அரசுக் கட்சி — 14 இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2 இடங்கள்
மன்னார் :
தமிழ் அரசுக் கட்சி — 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 1
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் — 1
கிளிநொச்சி :
தமிழ் அரசுக் கட்சி — 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 1
முல்லைத்தீவு :
தமிழ் அரசுக் கட்சி — 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 1
வவுனியா :
தமிழ் அரசுக் கட்சி — 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2
-BBC
வாழ்த்துக்கள் ! தனி மாநில ஆட்சி மன்றத்தை அமைத்து ஒற்றுமையாக இருந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்யுங்கள். இந்த வெற்றியானது தனி ஈழம் அமைய உறுதியாகி விட்டது. ராஜபக்சே அழிவு காலம் நெறிங்கி விட்டதை உணர்த்துகிறது.
சீரியன் உங்கள் வாய் முகுர்த்தம் பலிக்கட்டும் !