யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த குழுவொன்று புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரியவருகின்றது.
வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டாசு வெடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன் எதிரொலியாகவே ஆயுதம் தரித்த குழுவொன்று பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் பலவந்தமாக புகுந்து அங்கு தங்கியிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் யாழ் நிலைமைகளை அவதானிக்கும் பொழுது புலரும் காலைப்பொழுதில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என எண்ணத் தோன்றுவதாக கபே அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல வன்முறைகள் நிகழும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதாகவும், ஆட்கடத்தல்கள், கைது நடவடிக்கைகள், சித்திரவதைகள் என பல்வேறான வன்முறைகள் நிகழலாம் எனவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழனின் வெற்றி துரோகிகளின் அம்பலம் வெளிப்பட தொடங்கிஉள்ளது.
இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் .நீங்களாவது தமிழை முன்னெடுத்து செல்லுங்கள் .
வட மாவட்ட தமிழ் ஈழ வெற்றிக்கு பின் இனிமேலும் ஏதும் கொடூரங்கள் நடந்தால் தமிழ் நாட்டு தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.இபோதே வட மாநிலம் மாவட்டம் நோக்கி 5 லச்சம் தமிழ் இளைஞர்கள் தமிழர் நாட்டிலிருந்து புறப்பட தாயாராக வேண்டும்.