கல்வி பெருந்திட்டத்தை வரைந்த நிபுணத்துவமற்ற நிபுணருக்கு ரிம20 மில்லியன்!

MEB-2013-2025நாடாளுமன்றம். கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கல்வி பெருந்திட்டத்தை வரைந்த மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ரிம20.56 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

டிஎபியின் செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியன் மிங் எழுப்பியிருந்த கேள்விக்குக் கிடைத்த பதில் அது.

இது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும் என்று அவர் கூறினார். தாய்DAP - Dr. Ong Kian

மெக்கின்சி அண்ட் கோ ஒரு நிருவாக ஆலோசனை நிறுவனம். அதற்கு கல்வி பற்றிய நிபுணத்துவ அறிவு கிடையாது என்றாரவர்.

“எனக்குத் தெரிந்த வரையில், மலேசிய கல்வி பெருந்திட்டம் ஒன்றை வரைவதற்கு புற ஆலோசகர்கள் பயன்படுத்தப்பட்டது இதுதான் முதல் தடவை. அதுவும் இவ்வளவு விலை கொடுத்து”, என்று அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

மலேசியாவிலுள்ள தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற திட்டத்தை உள்ளடக்கியுள்ள மலேசிய கல்விப் பெருதிட்டம்  2013-2025 ஐ வரைவது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே, மலேசிய கல்வி அமைச்சருக்கும் அம்னோவுக்கும் வெளிநாட்டு நிபுணத்துவம் தேவைப்பட்டது.

மறந்து விடக்கூடாது: இந்நாட்டின் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்ற ஆலோசனையை 1951 ஆம் ஆண்டில் இந்நாட்டு அரசாங்கத்திற்கு வழங்கியது ஒரு வெளிநாட்டுக்காரர்தானே. அந்த ஆலோசனையின் அடிப்படையில்தானே அன்றையக் கல்வி அமைச்சர் அப்துல் ராசாக், ரசாக் அறிக்கை 1956 ஐ வரைந்து வெளியிட்டார். தாய்மொழிப்பள்ளிகளுக்கு மூடு விழா கொண்டாடிய பின்னர் அனைத்து இன மாணவர்களுக்கும் ஒரே போதனா மொழி திட்டம் அந்த ரசாக் அறிக்கையில்தானே முதன்முதலில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் நோக்கம் நிறைவேற்றம் காணவில்லை. சீன சமூகத்தின் கடும் எதிர்ப்பு. அதன் காரணமாக அது கல்விச் சட்டமாக்கப்படவில்லை. அதற்காக, அதை மறந்து விடுவதா?  அம்னோவின் இறுதிக் குறிக்கோள் தாய்மொழிப்பள்ளிகளுக்கு சமாதி கட்டுவது. அக்குறிக்கோள் பல்வாறு வழிகளில் அமலாக்கப்பட்டு வருகிறது.

அந்த ரசாக் அறிக்கைதான் இந்நாட்டு கல்வி அமைவுமுறையின் அடிக்கல் என்று கூறியவரான சுல்கிப்லி அப்துல் ரசாக் பெருந்திட்ட தயாரிப்பு குழுவில் மலேசியா சுயேட்சை சீராய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். எப்படி?

இன்றையக் கல்வி அமைச்சர் முகைதின் யாசினுக்கு தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்பதில் எல்லையற்ற அவா! ஆகவே, அவர் வெளிநாட்டு நிபுணத்துவதை கொண்டு வந்தார்.

தாய்மொழிப்பள்ளியை அழிப்பதற்கு ரிம20 மில்லியன் செலவிடுவது ஒரு பெரிய தொகையா?  இது ஒரு பெரிய விசயமா என்று தற்காத்து பேசுவதற்கு கல்வி அமைச்சில் ஒரு காவலர் இருக்கையில் முகைதின்ஏன் அஞ்ச வேண்டும்?

 

 

 

 

TAGS: