கடந்த மே மாதம் 505 கறுப்புத்தினப் பேரணியை ஏற்பாடு செய்த குற்றத்துக்காக ஜோகூர் பிகேஆர் நிர்வாகச் செயலாளர் யுனேஸ்வரனுக்கு ஜோகூர் செஷன்ஸ் நீதிமன்றம் ரிம6,000 அபராதம் விதித்தது.
505பேரணி ஏற்பாடு செய்த குற்றத்துக்காக அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் (பிஏஏ) தண்டிக்கப்படும் முதலாவது ஆள் அவராகத்தான் இருக்க வேண்டும்.
தீர்ப்பை எதிர்க்கும் வகையில் யுனேஸ்வரன் அபராதத் தொகையைச் செலுத்த மறுத்தார்.
“அதன் காரணமாக அவர் இன்றிரவு ஆயர் மொலேக் சிறைக்கு அனுப்பப்படுவார்”, என யுனேஸ்வரனின் வழக்குரைஞர் ஹசன் அப்துல் கரிம் கூறினார்.
“நாளைக்கு அவர் அபராதத் தொகையைச் செலுத்துவாரா என்பது தெரியவில்லை. செலுத்தாவிட்டால் அவர் குளுவாங் சிறைக்கு அனுப்பப்படுவார்”, என ஹசன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.