ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
குற்றச் செயல் விசாரணை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு காத்திரமான வகையில் தீர்வு காணாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
நவநீதம்பிள்ளையின் மதிப்பீடுகள் கவனத்திற் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச தரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், நீதித்துறைத் தலையீடுகள், குறித்து மனிதஉரிமை ஆணையரின் கவலைகளை நாமும் பிரதிபலிக்கிறோம்.
மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் அதிகரித்து வருவது குறித்தும், மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்களை புரிவோர் தண்டிக்கப்படுவதில் இருந்து தப்பித்தல், அமைதியாக ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகள், வெலிவேரியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான மனிதஉரிமை ஆணையரின் கவலைகளுடன் நாமும் பங்கு கொள்கிறோம்.
பொறுப்புக்கூறுவதில் முன்னேற்றமின்மை, அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் என்ற மனித உரிமை ஆணையரின் கருத்தை நாமும் சுட்டிக்காட்டுகிறோம்.