இந்நாட்டு தேசியவாதிகளின் அமோக அரசியல் ஆதரவு இருந்தும் பெரும் சர்ச்சைக்குள்ளான தண்டா புத்தெரா படத்தை காப்பாற்ற முடியவில்லை.
இவ்வார தொடக்கத்தில் அப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்ட போது அப்படம் வெற்றிகரமாக தோல்வியில் முடிந்தது. நட்டம் சுமார் ரிம3.77 மில்லியன்தான்.
அப்படம் ரிம4.7 செலவில் தயாரிக்கப்பட்டது. 25 நாள்கள் சினிமா அரங்குகளில் ஓடிய அல்லது ஓட்டப்பட்ட அந்தப்படம் வெறும் ரிம930,000 மட்டுமே வசூலிக்க முடிந்தது.
அவர்களுக்கு நட்டம் ஏற்பட வாய்ப்பில்லை. அரசாங்கம் அதனைச் சரி கட்டி விடும். அப்புறம் எதற்கு அம்னோ?
இந்த படத்தை போட்டு மக்களை ஏமாற்ற முடியாது. உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் perkasa மற்றும் வேறு இன வெறி பிடித்த NGO’s நட்டத்தை சரி செய்வர். அநேகமாக BN அரசாங்கமே அதை ஏற்று கொள்ளும். இந்த படத்திற்கு சிறந்த விருதை அளித்து கௌரவிப்பார்.
என்ன அப்புடியா நாங்க காதுல பூ சுத்திக்கிட்டு இருக்கோம் கண்டதை நம்புவதற்கு
ஆமாம் சார் நம்ம ஆளுங்களை டைகர் களை ஜூ வில் அடைத்து சுட்டு தள்ளுகிறார்கள் பின்னே யார் போய் தட்டி கேட்பது,நமக்கு தான் குடும்பம் குட்டி இருக்கு,மத்தவங்களுக்கு ஏது.மலாய் இனத்துக்கு அம்னோ,பெர்காச,ஜலூர்3 போன்ற தீவிர வாத கும்பல் அரசாங்க ஆதரவோடு இருக்காணுங்க.நாம எது செஞ்சாலும் மொதல்லே நம்ம ஆளுங்களுக்கே புடிக்காது.அரசாங்கத்தை சொல்லவா வேணும்.
மற்றவர்கள் தலை மீது ஏறி முன்னேறும் நீங்கள் எங்கடா உருப்பட
போறிங்க.மக்கள் பணம் இருக்கு umno அரசாங்கம் எல்லாம் சரி
செய்து விடும் .
தண்டா புத்ராவா … தண்டமான புத்ராவா…?
உண்மைக்கு புறம்பாக காட்சிகளை ஜோடிச்சு படமெடுத்தால் இதுதான் நடக்கும். ஆமாம் , அம்னோவில் உள்ளவணுங்க படம் பார்க்க போகலையா ?? அவனுங்களே விரும்பலேனா ?? துங்குவை வைத்து படம் எடுங்கள் , நிச்சயமாக வெற்றிபெறும் .