கெடா மாநில மந்திரிபுசார் முக்ரிஸ் மகாதிர் பழிவாங்கும் மந்திரிபுசார் என்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. பாரிசானுக்கு எதிரான வாக்களித்ததால் சீனர்களை தண்டிக்கும் எண்ணத்தில் செயல்படுகிறார் என்று செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோ கூறுகிறார்.
கெடா மாநில சீனப்பள்ளிகளிடமிருந்து வரும் எந்தக் கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முக்ரீஸ் விடுத்துள்ள அறிக்கை “ஒரு மந்திரிபுசாரின் தகுதிக்கு ஏற்றதல்ல”, என்று கோ இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“யாருக்கு ஆதரவு அளிக்க விரும்புகின்றனர் என்று தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை முக்ரீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு சீன வாக்காளர்களும் வரி கட்டுகிறவர்கள் என்பதையும் அவர் உணர வேண்டும்”, என்று தெரசா மேலும் கூறினார்.
தமது நிருவாகம் தேசியப்பள்ளிகள் மீது கவனம் செலுத்தும் ஏனென்றால் பாரிசானுக்கு வாக்களித்து கெடாவில் மீண்டும் ஆட்சியில் அமர்த்தியவர்களை தாம் உதாசீனம் செய்ய முடியாது என்று செப்டெம்பர் 24 இல் ஷா அலாமில் செய்தியாளர்களிடம் முக்ரீஸ் கூறியுள்ளார்.
“நான் நியாயமாக நடந்து கொள்ள விரும்புகிறேன். நானும் மனிதன்தானே. இறுதியில் எனக்கு முன்பு உதவியவர்களுக்கு உதவும் கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறேன்”, என்றாரவர்,
முக்ரீஸ் இவ்வாறு கூறியிருப்பது இது முதல்தடவை அல்ல. தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காக தாய்மொழிப்பள்ளிகளை தேசியப்பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று முன்பே அவர் கூறியுள்ளதை கோ சுட்டிக் காட்டினார்.
முக்ரீஸ் மகாதிரி முன்பு அம்னோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட போதும் தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார்.
சீன சமூகத்தினர் தெரிவித்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தாம் அவ்வாறு கூறவில்லை என்று மழுப்பியவர்தான் இந்த முக்ரீஸ். இவர் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டியவர். இது என்ன ஒரு சிறிய விசயம்தான் என்று கூறுவதற்கு தயாரக துணைக் கல்வி அமைச்சர் இருக்கும் வரையில் முக்ரீஸ் இதுவும் கூறுவார், இன்னமும் கூறுவார்.
இருக்கிற கொஞ்ச நஞ்ச சீன ஒட்டு அடுத்த தேர்தலில் உனக்கு அறவே கிடைக்காது மவனே !
அப்பன் புத்தி தானே மகனுக்கும்!!!
இதில் ஆச்சிரியப் படுவதிர்க்கு
என்ன இருக்கு???
சீனன் வோட்டு பாரிசானுக்கு இல்லாவிட்டால்,ஆட்டுக்கரிக்கு இந்தியன் வோட்டு போடுவான் உதாரணம் உலு சிலாங்கூர் கமலா நாதன்!
சார் சா ஆளாம் மில் 1 லட்சம் வோட்,பாஸ்+பி கே ஆர் 60% .அம்னோ 40%,ஹிந்து வோட் தான் வெற்றியை தந்தது.சோ மலைய்ஸ் மேஜருட்டி அம்னோ வுக்கு வோட் போடிருகாங்க்கோ.நோர்டின் ஐ பழி வாங்க திரண்ட நம் மக்கள்,மற்றும் ஷா அலாம் எம் ஐ சி ஆதரவும் வெற்றியை முடிவு செய்தது.எம் ஐ சி செக்சென் 23 வுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்கள் நாம்.
அப்பன் மகன் இனவெரியன்கள் யானை கொழுத்தால் மண்ணை
வாரி தன் தலையிலே போட்டுக்கொள்ளும் என்பார்கள் அந்த கதி தான்
இவன்களுக்கு.
அமைச்சரோ துணை அமைச்சரோ , கல்வியைபொருதமட்டில் – குறிப்பாக எல்லா பள்ளிகளுக்கும் இவர்கள்தான் முழு பொறுப்பு . கமலநாதன் அவர்கள் இந்தவிசயத்தில் பருப்பா இல்லாமல் கொஞ்சம் நெருப்பா இருக்கணும். துணிந்து கண்டிக்கவேண்டும் . கோயா குட்டி மகன் என்பதற்காக தயங்ககூடாது , அப்படி பயம் இருந்தால் , பதவியை விட்டு விலகிகொல்லுங்கள் !!
அப்பன் இனத்தை பிரித்தான்…. இவன் மகனோ இனத்தை வெறுக்கிறான். கேடுகெட்ட குடும்பம்!!!! இவன் அப்பன் தொலைந்தால்தான் நம் நாட்டில் ஒற்றுமை மலரும்!!!!!!!