வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள பேராதரவு, உலகத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உலக ஊடகங்கள் அனைத்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை பிரமிப்போடு பார்க்கின்றன.
ஜனநாயக ரீதியாக தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ள அரசியல் அபிலாசைகளை உலக நாடுகள் அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் நோக்குகின்றன.
ஏனென்றால், சர்வதேச சமூகத்துக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமான செய்தியை எடுத்துக் கூறியுள்ளது.
சர்வதேச சமூகத்தினதும், ஊடகங்களின தும் முன்னைய நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து கொள்ளவும், சுயபரிசோதனை செய்து கொள்ளவும்- இந்த தேர்தல் முடிவுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.
தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரிய போராட்டத்துக்கு, ஒருகட்டத்தில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதற்குத் தாமும் பொறுப்பு என்ற உள்ளார்ந்த குற்றவுணர்ச்சியில் உலகமே கூனிக்குறுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த ஒருதலைப்பட்சமான முடிவே, தமிழர்களைப் பேரழிவுகளுக்குள் தள்ளிவிட்டது. இந்த வரலாற்று அவப்பழியில் இருந்து ஒருபோதும், சர்வதேச சமூகத்தினால் விடுபட முடியாது.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஐ.நா. பொது ச்சபையில் உரையாற்றிய, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா. தவறுகளை இழைத்துவிட்டது என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்.
உள்ளக விசாரணைகளின் முடிவில் ஐ.நா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
அதுபோலவே, போருக்குத் துணை நின்ற நாடுகள், இப்போது தாம் தவறு செய்து விட்டதாக உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தவறுகளை அவர்கள் உணர்வதால், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இழந்தவை எதுவும் மீளக் கிடைக்கப் போவதில்லை.
அழிவுகளின் மீதும் இழப்புகளின் மீதும் நிமிர்ந்தெழ வேண்டிய நிலையில் உள்ள தமிழ் மக்கள், இந்தத் தேர்தல் மூலம் சர்வதேசத்துக்கு ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளார்கள்.
தமது தாயகப் பகுதியில், தம்மைத் தாமே ஆளும் வகையில், சுதந்திரமாக, நிம்மதியாக வாழ்வதற்கான எதிர்பார்ப்பை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் இத்தகைய முடிவை உலகிற்கு வெளிப்படுத்தியது இது தான் முதற்தடவையல்ல.
1977ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால், அப்போது தமிழர் விவகாரம் சர்வதேச மயப்பட்டிருக்கவில்லை.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்து, தமிழ் மக்கள் தமது விருப்பினை வெளிப்படுத்தினர்.
ஆனால், அதனை சர்வதேச சமூகம் வேறு விதமாகப் பார்த்தது.
விடுதலைப் புலிகளின் மூலம் அடையப்பட்ட வெற்றியாகவே, இலங்கை அரசு பிரசாரப்படுத்தியது. சர்வதேச சமூகம் அவ்வாறே தவறாக எடைபோட்டது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் கிளிநொச்சியை உள்ளடக்கிய யாழ். மாவட்டத் தில், 257,320 வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.
இப்போதும், கிளிநொச்சி, யாழ்.மாவட்டங்களில் சுமார் இரண்டரை இலட்சம் வாக்குகளையே கூட்டமைப்பு பெற்றுள்ளது.
இவையிரண்டுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இல்லை.
எனவே, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி மோசடியானது என்ற சர்வதேச சமூகத்தினது அப்போதைய முடிவு தவறானது என்ற உண்மை இப்போது வெளிப்படையாகியுள்ளது.
அதாவது புலிகளால் தான் கூட்டமைப்பு வெற்றி பெற்றது என்ற கருத்து உடைக்கப்பட்டுள்ளது.
புலிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த காலத்துக்கும், புலிகளின் ஆதிக்கம் இல்லாத காலத்துக்கும் இடையில், தமிழ்மக்களின் வாக்களிப்பு பாரம்பரியத்தில் மாற்றம் நிகழவில்லை.
அதேவேளை, தமிழ்மக்கள் அரசாங்கத்தை நிராகரித்து, அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை நிராகரித்து தமக்கான உரிமையே முக்கியமானது என்று தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது, போருக்குப் பிந்திய சூழலில், அரசியல்தீர்வு ஒன்றே முக்கியமானது, முதன்மையானது என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.
போர் முடிவுக்கு வந்தவுடன், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் போரி னால் ஏற்பட்ட காயங்களை அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் ஆற்றுவதற்கு முற்பட்டது.
அதற்கு உலக நாடுகள் பலவும் துணை நிற்கவும் தவறவில்லை. எல்லா நாடுகளுமே அதற்கு ஆதரவாக நின்றன.
பல நாடுகள் அனுதாபப்பட்டு கொடுத்த உதவிகளை இலங்கை அரசாங்கம் தனக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்காகப் பயன்படுத்திக் கொண்டது.
ஆனால், மாகாண சபைத் தேர்தல் முடிவு, இந்த நாடுகளுக்கு, உதவிகளுக்கு முன்னர் உரிமைகள் தான் முக்கியம் என்ற உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், சர்வதேச சமூகத்துக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
இதுவரை இலங்கை அரசாங்கத்தை, மனித உரிமைகள் விவகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு அழுத்தம் கொடுத்து வந்த நாடுகள், இறுதித் தீர்வுக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளன.
மாகாண சபைத் தேர்தல் முடிவு வெளியானதும், இந்தியா வெளியிட்ட அறிக்கையில், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படியும் அதற்கு அப்பால் செல்லும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
நவநீதம்பிள்ளையின் அறிக்கையிலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடனும் வடக்கு மாகாண சபையுடனும், இலங்கை அரசாங்கம் இணங்கிச் செயற்பட வேண்டும் என்று எல்லா நாடுகளும் அமைப்புகளும் வலியுறுத்திக் கூறியுள்ளன.
மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தியுள்ள கருத்தை, இலங்கை அரசாங்கத்தினாலோ சர்வதேச சமுதாயத்தினாலோ நிராகரிக்க முடியாது.
இதனால் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி, இலங்கையை நகர்த்திச் செல்ல வேண்டிய நிலை சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைப்பதையே, போருக்குத் துணை நின்றதற்காக தாம் செய்ய வேண்டிய பிராயச்சித்தமாகப் பல நாடுகள் கருதிக் கொண்டிருந்தன.
இப்போது, அதற்கும் அப்பால், தவறான தமது முடிவுகளுக்காக நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்பது, அந்த நாடுகளுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இது தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைப் பெறுவதற்கான கதவுகளை அகலத் திறந்து விட்டுள்ளது.
ஏனென்றால், இப்போது தமிழ்மக்களின் கருத்தை சர்வதேச சமூகம் நன்றாக அறிந்து கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் நிலைப்பாடுகளின் மீதுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள சர்வதேச அங்கீகாரத்தின் பெறுமானம் உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே புதுடில்லியும், வாஷிங்டனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இராஜதந்திர அங்கீகாரத்தைக் கொடுத்திருந்த நிலையில், இப்போதைய தேர்தல் வெற்றி அவர்களை இன்னும் உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னிறுத்தி சர்வதேச சமூகம் உரையாடும் நிலையை தோற்றுவித்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தையும் அவ்வாறே செயற்படும் படியும் அழுத்தங்களையும் கொடுக்கப் போகிறது.
தமிழ் மக்கள் சரியான நேரத்தில், சரியாக எடுத்த முடிவு, நான்கு ஆண்டுகால அரசியல் வெறுமை நிலையில் இருந்து தமிழர்கள் வெளிவரவும் உதவியாக இருக்கப் போகிறது.
இலங்கையில், ஏற்பட்ட அமைதியின் மைக்கு காரணம் பயங்கரவாதப் பிரச்சினை அல்ல, தமிழர்கள் எதிர்கொள்ளும், உரிமைப் பிரச்சினையே என்ற உண்மை, மீண்டும் ஒரு முறை ஜனநாயக ரீதியாக உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொண்டு, தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச்சூழலில், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கத் துணை நிற்பது ஒன்றே, கடந் தகால அவப்பழிகளில் இருந்து உலகம் விடுபடுவதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.
– ஹரிகரன்
சற்று பின் நோக்கி…. தமிழர்களின் பொற்காலம் எனக் கருதப்படும் சங்க காலதிலே இலங்கையில் தமிழர்கள் பூர்வ குடிகளாக வழ்துள்ளனர். அவர்களுள் ஒருவர்தான் ஈழத்து பூதந்தேவனார் என்ற அருந்தமிழ் புலவர் காலம் கிமு1619. பிறகு போர்த்துகீசியர் இலங்கையை வென்றனர். 1948 ல் இலங்கை விடுதலை பெற்றபோது நாடான்ற தமிழ் இனத்தால் மீள முடியவில்லை.ஈழத்தந்தை செல்வா இலங்கையின் இன வாத தமிழ் மொழி எதிர்ப்பு காரணமாக 1957 லில் செல்வநாயக பண்டார நாயக்க ஒப்பந்தம் ..1965 செல்வநாயகம் டட்லி ஒப்பந்தம் 1970லில் செல்வநாயகம் சிறிமாவோ ஒப்பந்தம் எல்லாத்தையும் இலங்கை இன வெறியர்கள் புறக்கணித்து தமிழர்களுக்கு ஜனநாயக துரோகம் செய்தனர். 1976கு பிறகு நடந்த கதை நமக்கு தெரியும்.1987 லில் இலங்கை அரசின் 13 வது சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டது.அனால் இது நாள் வரை அமெரிக்க வல்லரசையும் ஐநா வையும் ஏமாற்றிய ஒரே உலக நாடு ஸ்ரீ லங்கா என்ற பெரும் அதற்கு கையாலாகாத நாடு என்ற பேர் இந்தியாவுக்கும் உண்டு இது உலக சரித்திரம்…இதில் தமிழ் நாட்டு தி மு க குழும கூட்டத்துக்கும் வேடதாரிகளுகும் பங்குண்டு. இன்றைய மன்மோகன் சிங்கின் எச்சரிக்கை மடலுக்கும் ராஜபக்ச தடா புடிலி என்பதால் இனி இந்தியா என்ன கிழிக்கபோவுது என்பதே கேள்வி. தமிழ் ஈழ போராட்டதில் கண்ணை மூடிகொண்ட ஒபாமாவுக்கும் இனி வேலை இல்லை, பான் கீ முன் வெக்கப்பட இவர்கள் எல்லாம் மனித உரிமைக்கு ஆப்பு அடிச்சி கேவலப்படுத்தபட வேண்டிய துரோகிகள்.
சேவியர் கதை முடிந்து விட்டது…. இப்பொழுது உனக்கு ஈழ பிரச்சனை கையில் வந்து இருக்கோ….. நீங்கள் யாரு என்று எனக்கு தெரியும்….எல்லாம் ரங்கனின் மாயை….
கவனிக்கவும் இதை எழுதிய ஹரிகரன் ..முன்னால் இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரி ..இலங்கையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகளில் இந்த மலையாளிக்கும் பங்கு உண்டு …..புலிகள் இந்திய எதிரிகளோடு உறவு வைக்கவில்லையாம் …புலிகள் போனபின்னர் இந்திய பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி விட்டதாம் ..என்று காலங்கடந்து ஞாநோதயம் பெற்ற இந்த மலையாளி புலம்புகின்றான் ….புலிகள் கைகள் ஓங்கியபோது அவர்களுக்கு எதிராக செய்யல்பட்டவன் தான் இந்த ஹரிகரன் என்ற மலையாளி
தமிழனுக்கு ஒரு தனி தாய் நாடு இல்லாதவரை காக்கா குருவிகள் கூட நம் தலையில் கொட்டும்!
நாடு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இனவாதிகள் , உலக இராணுவத்திற்கு ,எடுத்துக்காட்டாக விளங்கிய ஈழ விடுதலை போராளியாம் ,விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று சர்வதேசத்தை நம்பவைத்து ,அனைத்து நாடுகளின் உதவிகளுடன் , விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று மண்ணை முத்தமிட்டவரும், விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாதிகளை அழிந்துவிட்டார்கள் ,ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது ,என்று தலைநிமிர்ந்த சர்வதேசமும் , தமிழ் ஈழத்தில் வாக்களித்த ,ஒற்றுமையின் ஒய்யாரத்தால் ,மண்ணை முத்தமிட்டவரின் ,மதியற்ற ஜனநாயகத்தாலும் ,தலைநிமிர்ந்திருந்த,சர்வதேச சமுதாயம் ,இன்று தலைதாழ்ந்துள்ளது ,இதன் வெளிப்பாடு நாம் , மற்றவர்களின் குறையை நோக்கியே நகராமல் ,மாற்றுவோம் நம்மை , நிறைகளை நோக்கி நகர்வோம் ,ஒன்றுபடுவோம் ஈழத்தின் வெற்றிபாதையில் [ மாறட்டும் தமிழர்கள் நிலை மலரட்டும் தமிழ் ஈழம் ].