தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினாலும் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காணி பொலிஸ் அதிகாரங்களை கோரும் உரிமை மாகாணசபைகளுக்கு காணப்படுகின்றது.
எனினும், அதனை வழங்குவது குறித்த பொறுப்பு வாய்ந்த தீர்மானத்தை எடுக்கும் கடமை அரசாங்கத்தைச் சாரும்.
மேல் மாகாணசபையின் முதலமைச்சராக சந்திரிக்கா பண்டாரநாயக்க கடமையாற்றிய காலத்தில் காணி பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், இந்த தீர்மானம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.
அதிகாரங்களை கோருவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.