குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (பிசிஎ) க்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் இன்றிரவு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
இன்று மாலை இச்சட்டத் திருத்த மசோதா குழு நிலையில் விவாதிக்கப்படுவதற்கு 115 க்கு 66 என்ற வாக்குகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குழு நிலையிலான விவாதம் இன்றிரவு நடைபெற விருக்கிறது. ஆறு எதிரணி உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள திருத்தங்கள் இக்கட்டத்தில் விவாதத்திற்கு வரும்.
இச்சட்டத் திருத்த மசோதா குறித்து மசீசவும் கெராக்கானும் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் அவை இத்திருந்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தாக வேண்டும் என்று அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் தெளிவுபடுத்தினார்.
கவலை வேண்டாம் முதல் கைது வேதமுர்த்திதான் ……….
சார்,வேதா 6-4 கோரிக்கை வாங்கி தந்தவர்,நம்ம அனுவார் வொன்றுக்கு கூட சம்மதம் தரலையே.
66 வாக்குகளில் எத்தனை ஆவி வாக்குகளோ ???
நம் இந்தியர் எதிர் காலம் என்னவோ .எங்கள் குழந்தைகளே மன்னியுங்கள், நல்லதோர் எதிர்காலத்தை உங்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம், நமக்காக போராடும் தலைவர் இலாததால்.
இந்த சட்டத்திருத்தம் ரவுடிகள், பொறுக்கிகள், கொலைகாரர்களுக்குதான் பீதியை கிளப்ப வேண்டும். ஆனால் பக்கத்தான் அரசியல்வாதிகள் ஏன் ஒப்பாரி வைக்கிறார்கள். ஒரு வேளை அவர்களும் களவாணி கூட்டத்தில் சேர்ந்து விட்டார்களோ
ஐயோ பாவம்.. பாக்காத்தான் ஆதரவாளர்களை நினைத்தால் சிரிப்புதான் வருது.. இந்த லட்சணத்தில் ஒரு மாங்கா வேதமூர்த்தியை பற்றி குறை சொல்றான்..
ஏற்கனவே இந்த சட்டம் அரசியல்வாதிக்கு எதிராக பயன்படுத்த பட்டது கணபதி எந்த லோகத்தில் வாழ்கிறார் ?