கெடா, சுங்கை லிமாவ் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் நவம்பர் 4 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 23, வேட்பாளர் நியமன நாளாகும். அதன்பின்னர் பரப்புரைக்கு 12 நாள்கள் ஒதுக்கப்பட்டு நவம்பர் 4-இல் வாக்களிப்பு நடைபெறும்.
அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசிசான் அப்துல் ரசாக், செப்டம்பர் 26-இல் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஸ் சட்டமன்ற உறுப்பினரான அசிசான், கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் கெடாவைக் கைப்பற்றுவதற்குமுன் அதன் மந்திரி புசாராக இருந்தவர்.