தமிழ் மற்றும் முஸ்லிம் நிர்வாகம் இணைந்து ஈழத்தை அமைக்கத் திட்டம்: தேசிய சுதந்திர முன்னணி

tna_slmc_002வடக்கின் தமிழ் நிர்வாகமும் கிழக்கின் முஸ்லிம் நிர்வாகமும் இணைந்து ஈழத்தை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்கு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையில் அண்மையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டமை மிகவும் பாரதூரமான நிலைமையாக தேசிய சுதந்திர முன்னணி கருதுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை ஆகிய இரண்டும் பிரிவினைவாதத்திற்கு வழியை ஏற்படுத்துபவை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் காணப்படும் அதிகார பலமானது பிரிவினைவாதத்தை வளர்க்கவும் அதற்காக குரல் கொடுக்கும் தெளிவான நிலைமைக்குள் உள்ளன.

இந்த நிலைமையில், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையில் யோசனை நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தான முன்னெச்சரிக்கையாகும்.

இது வடக்கு கிழக்கை இணைந்து தமிழ் இராஜ்ஜியத்தையும் முஸ்லிம் இராஜ்ஜியத்தின் பிராந்தியங்களின் கூட்டை ஏற்படுத்துவதற்கான பாரதூரமான நடவடிக்கையாகும்.

நிர்மாணிக்க முயற்சிக்கும் தமிழ் இராஜ்ஜியமும் முஸ்லிம் இராஜ்ஜிய பிராந்திய கூட்டும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் நாடுகளாக இருக்காது. அவர்களை துன்பத்தில் இருந்து மீட்கும் நாடுகளாக இருக்காது.

வேறு ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கு அமைய உருவாக்கப்படும், மோதல்கள் மற்றும் தற்போதைய துயரங்களுக்கு மேலான துயரங்களை கொண்ட நாடுகளாக இருக்கும். அத்துடன் பாதிப்புகளை அனுபவித்த மக்களை மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் நாடுகளாக அவை இருக்கும்.

துயரம் நிறைந்த அரசை நோக்கி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி கொண்டு செல்லும் இனவாத அரசியல் பற்றி தேசிய சுதந்திர முன்னணி ஆரம்ப முதலே வெளிப்படுத்தி வந்துள்ளது.

இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றாக இணைந்து வலுவான நிலைமையில் உரிமைகளை வென்றொடுப்பதா அல்லது குறுகிய எல்லைகளுக்குள் விழுந்து வேறு நோக்கங்களுக்காக பலியாகி சண்டைப்பிடித்து கொள்ளும் பூமியொன்றின் இலக்காக மாறுவதா என்பது தொடர்பில் மக்கள் கட்டாயமாகவும் உடனடியாகவும் தீர்மானிக்க வேண்டும் என முஸ்ஸாமில் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

TAGS: