வாசுதேவ தனது சம்மந்தி விக்னேஸ்வரனுக்கு அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க முயற்சி: இராவணா பலய குற்றச்சாட்டு

vasudeva_wigneswaran_001அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது சம்மந்தியான விக்னேஸ்வரனுக்கு அதிகளவான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் இடமில்லாது போனால் வடக்கில் தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதை அறிந்திருப்பதால் வாசுதேவ இவ்வாறு தனது சம்மந்திக்கு அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருகிறார்.

அவர் இனவாதத்தை கையசைத்து அழைக்கின்றார். சம்மந்திக்கு அதிகாரங்கள் செல்வதை மற்ற சம்மந்தி விரும்பாமல் இருக்க மாட்டார்.

தேசப்பற்றாளர் என்று தம்மை கூறிக்கொள்ளும் வாசுதேவ போன்றவர்கள் இலங்கையின் இறையாண்மைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி தனிநாட்டை உருவாக்க முயற்சிக்கும் விக்னேஸ்வரன் போன்ற ஒருவருக்கு உதவி வருவது கவலைக்குரியது.

நாட்டை பிரிக்கும் அதிகாரங்களை பகிர்வது நாட்டிற்கு துரதிஷ்டமானது. நாட்டின் ஐக்கியத்திற்கு வாசுதேவ நேரடியான அழுத்தங்களை கொடுத்து வருகிறார் என்றார்.

TAGS: