இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை: திஸ்ஸ விதாரண

tissa_vitharana_001இலங்கையில் தேசியப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கொனமனின் 96வது ஜனன தினத்தை முன்னிட்டு மருதானையில் உள்ள அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இன்னும் தேசிய ஐக்கியம் கட்டியெழுப்பப்படவில்லை. நாட்டில் இன்னும் இனப்பிரச்சினை காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

அன்று இடதுசாரிகளின் தலைவர் பீற்றர் கெனமன் உள்ளிட்ட தலைவர்கள் முன்வைத்த இரண்டு மொழிகளை தேசிய மொழியாக்கும் கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால், தற்போது இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இதற்கு புறம்பாக சிங்கள மொழியை மாத்திரம் தேசிய மொழியாக அறிவித்து அதனை அமுல்படுத்தியமையே பிரச்சினைக்கான காரணமாக அமைந்தது.

இதனால் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் பிரதான மொழிகளாக்கும் அத்தியாவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் கியூபா தூதுவர் மற்றும் இடதுசாரி அரசியல்வாதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

TAGS: