கொலை செய்ய போலீசை ஜாஹிட் தூண்டுகிறார், பிகேஆர் சாடுகிறது

surenகுற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை முன்னெச்சரிக்கையின்றிச் சுட்டுக் கொல்வதில் தவறில்லை என்று கூறிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கடும் கண்டனம்  தெரிவித்துக் கொண்டார்.

உள்துறை அமைச்சர் கொலை செய்ய போலீசை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டிய சுரேந்திரன், போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் வழக்குகளைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

“முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சந்தேகப் பேர்வழிகளைச் சுட்டுக்கொல்வது குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின்படி குற்றமாகும். அக்குற்றத்தைப் புரிய ஜாஹிட்டும் போலீஸ் உயர் அதிகாரிகளும் உடந்தை என்பது தெரிய வருகிறது.

“சுருங்கக் கூறின், அமைச்சரின் பேச்சு, உள்துறை அமைச்சின் அங்கீகாரத்தோடு குற்றச்செயலில் ஈடுபட போலீசைத் தூண்டுகிறது”, என பாடாங் செராய் எம்பியுமான சுரேந்திரன் கூறினார்.

 

TAGS: