சமீபத்தில் நடைபெற்ற வடமாகானசபைத் தேர்தல் குறித்து, செய்திகளை சேகரிக்கச் சென்ற , முரளீதரன் என்னும் புதிய தலைமுறையின் தொலைக்காட்சி நிருபர் சில வேண்டத்தகாத வேலைகளில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர்களை பேட்டி கண்டார் பரவாயில்லை ! ஆனால் ஈழத் தமிழர்களின் மற்றும் உலகத் தமிழர்களின் துரோகியான கே.பியையும் இவர் பேட்டிகண்டு, அதனை ஒளிபரப்பு செய்துள்ளார்கள் என்றால் சற்று யோசிக்கவேண்டிய விடையம் தான். ஒரு ஆர்வக் கோளாறில் முரளீதரன் கே.பியை பேட்டி கண்டிருக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு புதிய தலைமுறை என்னும் தமிழக தொலைக்காட்சி ஒளிபரப்புச்செய்யமுடியும் ? என்று கேள்விமேல் கேள்வி எழுப்பியுள்ளார்கள், புலம்பெயர் தமிழர்கள். “மாறிப்போன வாழ்கை” … என்று கீழே எழுதில் ஓடுகிறது… இது கே.பியின் வாழ்கை தற்போது மாறிவிட்டதாம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் ! அதுமட்டுமா ?
கோட்டபாய ராஜபக்ஷ தான் , தன்னுடைய புலனாய்வுப் பிரிவினரை மலேசிய அனுப்பி கே.பியைக் கைதுசெய்தேன் என்று சி.என்.என் செய்தி சேவைக்கு தெரிவித்தார். ஆனால் இந்த நேர்காணலில் கே.பி தன்னை மலேசியப் பொலிசார் கைதுசெய்ததாகவும் அப்போது தன்னுடன் “லூக்காஸ் அம்மான்”(நடேசனின் சகோதரரோடு) இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்த இடத்திலேயே உதைக்கிறது. அதுமட்டுமல்லாது , இரு தரப்பும்(அதாவது புலிகளும் இலங்கை அரசும்) போர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று , கே.பி கூற அதற்கு “ஆமாம்” “சாமி” போடுகிறார் புதிய தலைமுறையின் நிருபர். இல்லை நாம் தெரியாமல் தான் கேட்கிறோம், கே.பியின் பேட்டியைப் போடுங்கள் என்று தமிழர்கள் என்ன புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் கெஞ்சினார்களா ? இவர்கள் ஏன் கே.பி என்னும் தமிழினத் துரோகிக்கு அங்கிகாரம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க முனைகிறார்கள் ?
ஒரு இடத்தில் கே.பி குறிப்பிடுகிறார், போர் குற்றங்களை விசாரிக்க முனைவது பெரும்பாண்மை இனத்தை கோபமூட்டும் செயலாக அமையுமாம் என்று. அப்படி என்றால் தமிழர்கள் சிறுபாண்மை இனம் என்று அவர் சொல்வதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா ? பெரும்பாண்மை— சிறுபாண்மை என்று எப்போது நாம் பேச ஆரம்பிக்கின்றோமோ அன்றே அடக்குமுறை என்ற சொல்லும் ஆரம்பமாகிவிடுகிறது அல்லவா ? இலங்கையில் உள்ள தமிழர்கள் பூர்வீகக் குடிமக்கள். அவர்கள் சிங்களவர்கள் இலங்கை செல்லமுன்னரே அங்கே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கான ஆதராங்கள் “மகாவம்சம்” என்னும் நூலில் உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சிறுபாண்மை இனத்தவர்கள் அல்ல ! அவர்கள் ஒரு தேசிய இன மக்கள். அவர்களுக்கு என்று ஒரு தேசியம், கலாச்சாரம், பண்புகள், நடைமுறைகள், மதம் என்பன உண்டு. முதலில் தேசிய இனம் என்றால் என்ன ? சிறுபாண்மை இனம் என்றால் என்ன என்று தெரியாத இவர்கள் போன்ற தறுதலைகளை நிரூபர்களாக ஏன் வைத்திருக வேண்டும் ?
விடுதலைப் புலிகளின் தலைவரால், பராமரிக்கப்பட்டு வந்த செஞ்சோலை, சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படை குண்டுமழை பொழிந்தபோது கே.பி எங்கே இருந்தார் ? பின்னர் புலம்பெயர் மக்களால் அது நடாத்திவரப்பட்டது. தற்போது அதனை பலவந்தமாக கைப்பற்றி, அதனை அவர் நடத்திவருகிறார் என்பதே உண்மை நிலை. இதனைக் கூடத் தெரிந்துவைத்திராத இத் தொலைக்காட்சி… பரபரப்பு தேடி அலைந்து , தமிழர்களை பாழும் கிணற்றில் அல்லவா தள்ளப்பார்கிறது. இதில் ஒரு வெட்கக்கேடான விடையம் ஒன்றும் உள்ளது. சர்வதேச விசாரணை தேவை என்றால் ஜேர்மனி, மற்றும் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் மக்கள் கொல்லப்பட்டதுபோல லட்சக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் தான் விசாரிக்க முடியும் என்று கே.பி சொல்ல, அப்படியே கேட்டுக்கொண்டுபோய் அதனை ஒளிபரப்பு செய்துள்ளார்கள் இவர்கள்.
எங்கள் தலையை எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை !
ஆனால் இந்த முரளிதரன் தமிழ் நாட்டுத் தமிழரா அல்லது இலங்கைத் தமிழரா? கே.பி. துரோகியா இல்லையா என்பது இலங்கைத் தமிழருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!
கேபி மலேசியாவில் பயங்கர நடிகனாக வசூல் செய்து வாழ்த்து மலேசியா தமிழர்களையும் ஈழத தமிழர்களையும் அகதிகளையும் பிறகு தமிழர் நாடு உலக நாடுகள் சென்று வசூல் வாழ்வு வாழ்ந்து இப்ப சிங்கலவனுக்கு தாங்கிற கேவல பிறவி.அவனை கண்ட இடத்தில சுடனும்.
புதிய சமுதாயம் TV மீது உலக மக்களுக்கு மரியாதை உண்டு அனால் இது போன்ற துரோகிகள் செய்திகள் நம்மை வெறுப்படைய செய்கிறது. செய்தியாளர் முரளீதரன் இதோடு இவனை மறந்து விட்டு தமிழர் தனி அரசியல் விவேகத்துக்கு தமிழர் நாட்டில் நல்ல பதிவுகளை விரிவாக்கம் செய்யலாம்.