கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனடா தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அந்த நாட்டின் தீர்மானத்தை மதிப்பதாக கமலேஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்து வந்தார்.
இந்தநிலையில் அவர் தமது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் குடும்பத்தில் கனடா ஏனைய நாடுகளை போன்று முக்கியமான நாடாக செயற்பட்டு வருகிறது.
இதேவேளை கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில். கனடாவின் வெளியுறவு அமைச்சின் மனித உரிமைகள் விவகார செயலாளர் பங்கேற்பார் என்று பொதுநலவாய செயலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.