கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் அனுபவித்த கொடூர சித்திரவதை

saththiyapavan_001கனடாவுக்கு சட்டவிரோதமாக 500 தமிழ் குடியேற்றவாசிகளை அழைத்துச் சென்ற பயணிகள் கப்பலை ஒழுங்கு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் இலங்கையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக சி.ரி.வி ஆவணங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சதி என்று அழைக்கப்படும் சத்தியபவன் ஆசிர்வாதம் என்ற இந்த நபர் எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் ஒரு வருடம் இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் பிளாஸ்டிக் குழாய்களினால் கடுமையாக தாக்கப்பட்ட இவர் உணவு மற்றும் குடிநீர் கொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக அவரது கனேடிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்தியக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தாக்கல் செய்துள்ள சத்தியக் கடிதத்தில் சத்தியபவன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தண்ணீர் தாகம் எடுத்து போது குடிப்பதற்கு தண்ணீரை தருமாறு கேட்டபோது, அவர்கள் என்னை கடுமையாக தாக்கினர்.

கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிர்வாணமான நிலையில் என்னை சிறிய கூண்டில் அடைத்து வைத்தனர். நாட்களை என்னால் கணக்கிட முடியவில்லை. ஏனெனில் முழுவதும் இருளாகவும் குளிராகவும் இருந்தது எனக் கூறியுள்ளார்.

இந்த சத்தியக்கடிதம் இலங்கையின் சமாதான நீதவான் ஒருவரினால் 2012 ஆம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சத்தியபவனின் சட்டத்தரணி கெப்ரியேல் சான்ட், தனது தரப்பு வாதி உயிருடன் இருந்ததால் அவரது பாதுகாப்பு கருதி இந்த சாட்சியங்களை பகிரங்கப்படுத்த முடியாதிருந்தது என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சத்தியபவன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது சட்டத்தரணிக்கு அவரது தரப்பு வாதி பற்றி பேச அனுமதி வழங்கப்பட்டது.

வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கையின் பெயர் தொடர வேண்டும் எனவும் அது நீக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்த பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை நாங்கள் நீக்கவில்லை. அதேபோல் இலங்கையையும் அந்த பட்டியலில் தொடர வேண்டும் என்றார்.

மேலதிக விபரங்கள் அறிய http://bc.ctvnews.ca/canada-deported-man-to-torture-in-sri-lanka-affidavit-1.1489741 வீடியோ
இணைப்பு

TAGS: