அம்னோ தேர்தல்கள் இன்னும் மூன்று நாள்களில் நடைபெறவுள்ள வேளையில், கைரி ஜமாலுடினுக்குப் போட்டியாளர்களே இல்லாததுபோல் தெரிகிறது. அவர்தான் மீண்டும் அம்னோ இளைஞர் தலைவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனலாம்.
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், ரெம்பாப் எம்பி-யும், கேஜே என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான கைரி, ஊடகங்களால் மிகவும் விரும்பப்படுபவராக விளங்குகிறார். அது அவருக்கு மிகவும் சாதகமாக உள்ளது. அதனால் மற்றவர்களால் அவரை எட்டிப் பிடிக்க முடியாதிருக்கிறது.
“கேஜே-தான் என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாக தெரிந்த விசயம்தான்” என்று இளைஞர் நிர்வாகக் குழுவுக்குப் போட்டியிடும் ஸைடெல் பஹாருடின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இவன் நல்லவன்
வரவேற்கிறேன் கே.ஜே.! பொதுவாக நீர் ஒரு நல்ல மனிதர்! கொஞ்சம் நல்ல மனசும் இருக்கு!
தமிழனின் ஏமாற்றத்தை பாருங்கள் !! இவன் ஒரு நல்ல மனிதன் ! இப்படிதான் மாகாதிர் மாமா தமிழன் தலையில் வைத்து கும்மி அடித்தான், பிறகு மகாதிர் தமிழனுக்கு ஆப்பு அடிதான்…..!!!!
பார்த்து! கொடி கம்பத்துடன் சேர்ந்து பறந்து விட போகிறார்! காக்கா பணத்தால் எதையும் செய்வான்! பெட்ரோனாஸ் அளவில்லா பணம் கொடுத்துகொண்டிருக்கிறது…………