இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஜோன் ஹிட்டிங் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போர் காலத்தில் வன்னி மக்களை பாதுகாப்பதில் இருந்து ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் ஜோன் பெற்றி என்பவர் விசாரணைகளை நடத்தி ஐக்கிய நாடுகளின் தோல்வியை உறுதி செய்தார்.
இதனையடுத்து பான் கீ மூன் தமது மன்னிப்பையும் கோரியிருந்தார். இந்தநிலையிலேயே ஜோன் பெற்றியின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் தமிழ் ஈழ மக்களை காப்பாற்ற வில்லை என்ற அறிக்கையை ஐநா நிபுணர் ஜோன் ஹிடிங் சொல்கிறார் என்ற கேவலமான பதிலை தர ஐநா என்ற 54 உலக நாடுகள் உறுப்பியம் கொண்ட இயக்க பொறுப்பாளர்கள் கூண்டோடு ராஜனாம செய்ய வேண்டும். இதனால் கோமன் வெல்த் மாநாடு ஸ்ரீ லங்காவில் நடப்பதையும் .ராஜபக்ச மாநாட்டு தலைவர் ஆவதையும் உலக மக்கள் ஏற்க மாட்டார்கள்.இதை மீறி நடந்தால் மனித உரிமை கொலை கூட்டதில் ஐநாவை சேர்க்க வேண்டி வரும்.இதனால் இப்போது பல நாடுகள் வீரியமுடன் வெளி ஏரி உள்ளது.
பன் கீ முன் இதற்கு பொறுப்பு ஏற்று தன் பதவியை விட வேண்டும் அப்போதுதான் இந்த ஐநா மன்றத்துக்கு மரியாதை. அடுத்த ஐநா மாநாட்டு தலைவரும் ஐநா புது பொது செயலாளரும் பதவி ஏற்க வழி விட தீர்மானம் ஏற்ற வேண்டும்.
அடுத்த மாதம் இன்னும் சரியாக 30 நாட்களே உண்டு. நமது அங்கலாய்ப்பு எல்லாம் அர்த்தமற்றதாய் உள்ளது.உலக தலைமைப்பீட அறிவாளிகள் மித வாத மனித உரிமை மட்ட உருமை என்றெல்லாம் பேசும் பாரக் ஒபமா /பிரிட்ஷ் அரசு/உலக மனிதமற்ற மன்னர்கள் உலக அதிபர்கள்/பிரதம முட்டாள்கள் /உலக நீதி என்னும் வோல்ட் ஜஸ்டிஸ் போர் பீஸ் என்பதெலாம் வேடிக்கை கோட்டான்கள ?
தன்னுரிமை என்பது குற்ற மெனில் உலகில் எந்த நாடும் இயங்க முடியாது.காலனி ஆட்சிக்கு எதிராக விடுதலை பெற்ற நாடுகள் பயங்கர வாதி நாடுகள் என்று முத்திரை அடித்தால் இன்று எல்லாமே கொலைகார நாடுகள் தாம்.ஆனால் தனது சொந்த மக்கள் மீது குண்டுகள் பொழிந்த ராஜ்பக்சவுக்கு எந்த நாட்டிலும் வாழ உரிமை இல்லை.இலங்கையில் நடந்த மனித கொலையால் புத்தர் மீண்டும் மனித பார்த்து புன்னகைக்க முடியாத நிலையில் மௌனித்து போனார்.எந்த ஆன்மீகமும் அங்கு இல்லை இருக்க முடியாது.இதனால் கோமான் வெல்த் மாநாடு சுத்த வேஸ்ட்! அது மனித கூட்டமன்று, மந்தைகள் சல்லாப சங்கமம் .
பன் கீ முன் பதவி விலக வேண்டும் .
நாம் என்ன காட்டு கத்து கத்தினாலும் எவனுக்கும் அதைப்பற்றி அக்கறை இல்லை
தமிழ்நாடும் இந்தியாவும் வேடிக்கை பார்த்துகொண்டிராமல் ஏதாவது செய்திருக்க வேண்டும். நமக்கு என்ன தகுதி இருக்கிறது? பணமில்லை ஒற்றுமையில்லை – முதுகு எழும்பில்லை– இவ்வளவு பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவையே எவனும் மதிப்பதில்லை –நம்மை எவன் மதிப்பான்?