பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி அவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பின் போதும் இதனை வலியுறுத்தியிருந்தார்.
எனினும் இந்திய அமைச்சர் இது தொடர்பில் அவர் அதிகம் பேசாமல் ஓரிரு வார்த்தைகளுடன் நழுவிவிட்டார் என்பதை இங்கு சுட்டிக்காட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் எதுவித மாற்றமுமில்லை எனவும் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தமை இரண்டையும் இணைத்து ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்,
தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அல்லது வேலைத் திட்டத்திற்கு முரணானது எனில் அதில் பிரச்சினை உள்ளது. எனினும் இது சத்தியப் பிரமாணத்துக்கும் தடையாக இருக்காது.
நாட்டின் அடிப்படைச் சட்டங்களுக்கு முரணானது எனில் அது தொடர்பில் சட்டப்படியான முறைமை கையாளப்படும் எனவும் தெரிவித்தார்.