வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களைக் கண்டு ஆளுநர் சந்திரசிறியும் அவரது அடிவருடிகளும் நடுங்கிப் போன சம்பவம் இன்று யாழில் பதவியேற்பு தினத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக நியமனம் பெற்றவர்களும் சத்தியப்பிரமாணங்களை செய்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும், ஆளுநருக்கு பந்தம் பிடித்து சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் செயற்பட்டு வந்த அதிகாரிகளும் அச்சத்தில் உறைந்திருந்தனர்.
வழமையாக நிகழ்வுகளில் பிரதான மேடைகளிலும், முன்வரிசைகளிலும் ஹீரோக்களைப் போல அமர்ந்திருப்பவர்கள் இன்று நிகழ்வில் பின்வரிசையில் மௌனமாக அமர்ந்திருந்தனர்.
வழமையாக ஆளுநர் சந்திரசிறியின் துரோகத்தனங்களுக்கு துணைபோன அதிகாரிகள் பலர் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். சிலர் தமக்கு விடுதலை கிடைத்ததாகவும் பேசிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் கண்டு ஆளுநர் சந்திரசிறி நடுநடுங்கிப் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சரையும் அமைச்சர்களையும் கண்டபோது பேச முடியாமல் சிரித்து சிரித்து ஆளுநர் சமாளித்துள்ளதாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் தொல்லை இல்லையென்று இருந்த நிலையில் கூட்டமைப்பு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நான்கு அமைச்சர்கள் அடங்கலாக 30 தொல்லைகளை வடக்கில் உலாவ விட்டுள்ளதாக ஆளுநர் சந்திரசிறி தெரிவித்துள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேலும் பதவியேற்பு முடிந்துள்ள நிலையில் என்னவெல்லாம் செய்யப் போகின்றார்கள் என்று தெரியவில்லையென்றும் புலம்பியதாகவும் செய்திகள் அடிபடுகின்றது.