‘அவர் பலவீனமானவர்’, ‘அவர் சட்டென்று முடிவெடுக்கத் தெரியாதவர்’, ‘அவர் ஒரு போராளி அல்லர்’-இப்படி இன்றைய ஸ்டார் நாளேட்டின் முதல் பக்கம் முழங்கியது. எல்லாம் மசீச துணைத் தலைவர் லியோ தியோங் லாய் பற்றித்தான்.
கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை மேற்கோள்காட்டி அந்நாளேடு வெளியிட்டிருந்த இந்தப்‘புண்மொழி’களால் சீற்றமடைந்திருக்கிறார் லியோ.
“அத்துமீறிப் போகிறது.ரொம்பவும் அத்து மீறிப் போகிறது. உண்மையில் அச்செய்தித்தாள் தப்பாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.
“என்மீது கொண்ட மனவெறுப்பின் காரணமாக அச்செய்தித்தாளின் முதல் பக்கத்தைப் பயன்படுத்தி என்னைச் சாடுகிறார். ஸ்டார் பத்திரிகை தர்மத்தை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது”, என லியோ மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மக்கள் எப்படி போனால் என்ன உங்கள் பாக்கெட் நிறைந்தால் சரி
உங்கள் பாம்பு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டீர்களே ???
STAR [ஸ்டார்] பத்திரிகை ம.சீ.ச. வினுடையது. அக்கட்சியின் தலைவர்களையே அது பலவீனப் படுத்துகின்றது என்றால்………
எல்லோரும் கூட்டுச்சேர்த்து முன்னாள் தலைவர் ஓங்கை ஓரங்கட்டிநீர்கள், இப்போ உங்களுக்குள் போராட்டம் ! இன்னும் நிறைய இருக்கு ! அடுத்தவனுக்கு குழி பறித்தால் இதுதான் கதி ! வாழ்க !