என்ன செய்யப் போகி­றது இந்­தியா?

salman rajapakse13வது திருத்­தச் ­சட்­டத்தை, நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்தோ, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது குறித்தோ, நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்று, ஒரே போடு போட்டு, இந்திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்­ஷித்தை திருப்பி அனுப்பி வைத்­துள்ளார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச.

காலத்­துக்குக் காலம் தெரி­வுக்­கு­ழுக்கள், ஆணைக்­கு­ழுக்கள் என்று நிய­மித்து, இனப்­பி­ரச்­சி­னையை இந்­த­ள­வுக்குக் கொண்டு வந்து விடக் கார­ண­மான, சிங்­களத் தலை­மை­களின் வழக்­க­மான இழுத்­த­டிப்பு உத்தியை, மீண்டும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச கையில் எடுத்­தி­ருக்­கிறார்.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் கொழும்புப் பயணம் திட்­ட­மி­டப்­பட்ட போதே, 13வது திருத்­தச்­சட்டம், தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்துப் பேசு­வது, அவ­ரது முக்­கிய நிகழ்ச்சி நிரலில் உள்­ள­டக்­கப்­பட்­டது.

ஆனால், இந்த விட­யங்­களில், இலங்கை அர­சாங்­கத்­துடன் எத்­த­கைய இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொண்டு, அல்­லது உறு­திப்­பாட்டைப் பெற்றுக் கொண்டு அவர் புது­டில்லி திரும்­பினார் என்ற
கேள்வி உள்­ளது.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்­ஷித்தின் பய­ணத்தில் வெற்­றி­க­ர­மாக அமைந்த ஒரே விடயம், சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்­பான புரிந்­து­ணர்வு உடன்­பா­டுகள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது தான். அதற்கு அப்பால், சல்மான் குர்­ஷித்தின் பயணம், எதையும் சாதித்­துள்­ள­தாக உண­ர­மு­டி­ய­வில்லை.

13வது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது அவ­சியம் என்றும், ஏற்­க­னவே கொடுத்­தி­ருந்­த­படி, 13வது திருத்­தத்­துக்கு அப்­பாற்­பட்ட அதி­கா­ரங்­களைப் பகிரும் உறு­தி­மொ­ழியை நிறை­வேற்ற வேண்டும் என்ற இந்­தி­யாவின் விருப்­பங்­களை அவர் அலரி மாளிகைச் சந்­திப்பில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

ஆனால், 13வது திருத்­தச்­சட்டம் மற்றும் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யங்­களில், தனக்கு எந்தப் பொறுப்பும் இல்­லா­தது போன்று தட்டிக் கழித்து விட்டார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச.

அதுவும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, நல்­லெண்­ணத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக, உள்­ளக முரண்­பா­டு­க­ளை­யெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, வடக்கு மாகாண முதல்­வரை, ஜனா­தி­பதி முன் பத­வி­யேற்க வைத்த மறு­நாளே, அவர் இவ்­வாறு நடந்து கொண்­டுள்ளார்.

13வது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, என்று எல்­லா­வற்­றை­யுமே, நாடா­ளு­ மன்றத் தெரி­வுக்­கு­ழுவே கவ­னித்துக் கொள்ளும் என்றும் அலட்­சி­ய­மாக அளிக்­கப்­பட்­டுள்ள பதில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை மட்­டு­மன்றி, இந்­தி­யா­வையும் நிச்­சயம் ஏமாற்றம் கொள்ள வைத்­தி­ருக்கும்.

ஏனென்றால், நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன்­பாக உள்ள சிக்­கல்­க­ளையும், ஆபத்­துக்­க­ளையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்பு வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யிலும், எப்­ப­டியும், அதற்குள் இறங்கித் தீக்குளித்தே­யாக வேண்டும் என்ற பிடி­வா­தத்தை அர­சாங்கம் இன்­னமும் விட்டு விட­வில்லை.

நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு, தமி­ழர் த­ரப்பின் எதிர்­பார்ப்­புக்­களை நியா­ய­மான முறையில் விவா­திக்கும் கள­மாக இல்­லா­ததே, அதற்குள் இறங்கத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயங்­கு­வ­தற்குக் காரணம்.
இன ரீதி­யா­கவும், கட்சி ரீதி­யா­கவும், அங்கு தமிழர் தரப்பின் நியா­யங்கள் எடு­பட வாய்ப்­பில்லை.

இந்த உண்­மையை இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகள் உணர்ந்­துள்­ளதால் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தெரி­வுக்­கு­ழு­வுக்குச் செல்­லு­மாறு அந்த நாடுகள் அழுத்தம் கொடுக்­க­வில்லை. இதனால், இந்த தெரி­வுக்­கு­ழுக்கள், எந்தப் பய­னு­மின்றி இருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

தெரி­வுக்­கு­ழு­வுக்கு மீள உயிர்­கொ­டுப்­பதன் மூலம், 13ஆவது திருத்­தச்­சட்டம் மற் றும், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்த, நெருக்­க­டி­களில் இருந்து தப்பிக் கொள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச முனைகிறார். இந்த விவ­கா­ரங்கள் தொடர்­பான தனது நிலைப்­பாடு என்ன என்­பதைக் கூட அவர் வெளி­யிடத் தயா­ராக இல்லை.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச நினைத்­தி­ருந்தால், தமிழர் தரப்பு அச்சம் கொள்­ளாத வகையில் தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­தி­ருக்க முடியும். குறைந்­த­பட்சம் இன ரீதி­யான சம­அ­ளவு பிர­தி­நி­தித்­துவம், கொடுத்திருந்தால், ஒரு­வேளை, கூட்­ட­மைப்­புக்கு இத்­த­கைய அச்சம் ஏற்­பட்­டி­ருக்­காது.

அல்­லது, தனது கருத்­தையும் வெளி­யிட்டு, குறிப்­பிட்ட உரி­மை­க­ளுக்கு தெரி­வுக்­ குழு உத்­த­ர­வாதம் அளிக்கும் என்று ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருந்தால் கூட, தெரி­வுக்­கு­ழு­வுக்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சம்­ம­தித்­தி­ருக்­கலாம்.

இவை எதையும் செய்­யாமல், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச முடி­யாது, எதை வேண்­டு­மா­னாலும் அவர்கள் தெரி­வுக்­கு­ழுவில் வந்து பேசட்டும் என்று தெரி­வுக்­கு­ழு­வையும், இனச்­சிக்­க­லுக்குத் தீர்வு காணும் முயற்­சி­க­ளையும் முடக்கிப் போட்­டது அர­சாங்கம் தான்.

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஒன்று திரண்டு வாக்­க­ளித்­தி­ருந்த போதிலும், வட மாகாண சபையைக் கைப்­பற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அர­சாங்­கத்­துடன் விரோதப் போக்கைக் கடைப்­பி­டிக்­காமல், மென்­போக்கில் செயற்­படத் துணிந்­துள்ள சூழ லில் கூட, அர­சாங்கம் தனது நிலையை விட்டு விலகத் தயா­ராக இல்லை.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், 13ஆவது திருத்­தமும் பறிபோய்க் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றது, ஆனால், அதற்­கெ­தி­ராக எதையும் செய்யத் தயா­ராக இல்­லா­தது அதன் பல­வீனம்.

இதனைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, 13ஆவது திருத்தம் குறித்து முடி­வெ­டுப்­பது கூட, தெரி­வுக்­குழு தான் என்று கூறி நழுவிக் கொண்­டி­ருக்­கிறார்.

இதன்­மூலம், இந்த விவ­கா­ரத்தை முடிவு காணாமல் இழுத்­த­டிப்­பதில் வெற்றி கண்­டு­விட்டார் என்று சிங்­கள மக்கள் மத்­தி­யிலும், தனது சகாக்கள் மத்­தி­யிலும் அவர் நல்­ல­பிப்­­ரா­யத்தைப் பெற்­றி­ருக்­கலாம்.
ஆனால், தமிழ் மக்­களோ, இந்­தி­யாவோ, சர்­வ­தேச சமூ­கமோ, அவ்­வாறு நினைக்கப் போவ­தில்லை.

நல்­லி­ணக்­கத்­துக்­கான வாய்ப்­பு­க்களை அவர் மீண்டும் தவ­ற­வி­டு­கிறார் என்றே இது கணிப்­பிட வைக்கும்.

போர் முடி­வுக்கு வந்­த­வுடன், அர­சாங்­கத்­திடம் அமெ­ரிக்கா வலி­யு­றுத்­திய விட­யங் கள் இரண்டு, முத­லா­வது நல்­லி­ணக்கம், இரண்­டா­வது பொறுப்­புக்­கூறல்.

இந்த நான்கு ஆண்­டு­களில் அர­சாங்கம், இந்த இரண்டில் எதையும் செய்­யா­ததால் தான், ஜெனீ­வாவில் இரண்டு தீர்­மா­னங்­களை எதிர்­கொள்ளும் நிலை ஏற்­பட்­டது.

ஆனாலும் அர­சாங்கம், தனது தவ­று­களைத் திருத்திக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­களைக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. எப்­ப­டி­யெல்லாம் காலத்தைக் கடத்­தலாம், அதி­கா­ரப்­ப­கிர்வை தட்டிக் கழிக்­கலாம், என்­ப­தி­லேயே அர­சாங்­கத்தின் கவனம் இருக்­கி­றது.

இது இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் ஏமாற்­ற­ம­ளிக்­கின்ற ஒன்­றா­கவே இருக்கும்.

ஏனென்றால், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தப் பயணம் குறித்து புது­டில்லி திரும்­பி­யதும் எது­வுமே கூற­வில்லை.

இதுவே இந்­தி­யா­வி­னது ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இலங்கை அரசின் பிடி­வாதம் இந்­தி­யா­வுக்கு எரிச்­ச­லூட்­டு­வ­தாக இருந்­தாலும், அதை எப்­படி வெளிக்­காட்டப் போகி­றது என்­பதே இப்­போ­துள்ள கேள்வி.

அதற்கு இந்­தி­யா­விடம் இப்­போ­தைக்கு உள்ள ஒரே துருப்புச் சீட்டு கொமன்வெல்த் மாநாடு தான். அதில் இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங் பங்­கேற்­பாரா என்­பது இன்­னமும் முடி­வா­க­வில்லை.

ஒரு பக்­கத்தில், கொமன்வெல்த் மாநாட்டை புறக்­க­ணிக்க வேண்டும் என்ற அழைப்­புக்கள் விடுக்­கப்­படும் சூழலில், இலங்கை அர­சுக்கு பதி­லடி கொடுப்­ப­தற்­கான வாய்ப்­பாக அவர் இதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

ஆனால் அவ்­வாறு செய்­வாரா என்­பது இன்­னமும் தெளி­வா­க­வில்லை. அதே­வேளை, அரை நனைந்­த­வ­னுக்கு கூதலும் குளிரும் இல்லை என்பது போல, இப்போது அரசாங்கத்துக்கும் குளிர் விட்டுப் போய் விட்டது.

மன்மோகன்சிங் வந்தாலென்ன வராது போனாலென்ன என்ற அளவுக்கு கொழும்பு வந்து விட்டதாகத் தெரிகிறது.

இத்தகைய நிலையில், கொமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்சிங் பங்குபற்றினாலும் சரி, பங்கேற்காது போனாலும் சரி, 13வது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியாவினால் எதையும் செய்ய முடியும் போலத் தெரியவில்லை. இந்தியாவினால் தான், வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கில் தேர்தல் நடத்துவதை உறுதிப் படுத்த முடிந்த இந்தியாவினால், அந்த மாகாணசபைக்குரிய அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதிருப்பது பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை இன்னொரு முறை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது.

– கபில்

TAGS: