அம்னோ இளைஞர் உதவித் தலைவர் தேர்தல் முடிவு, ஹஜ்ஜு பெருநாளுக்குப் பின்னரே அறிவிக்கப்படும்

1-tajolஅம்னோ இளைஞர் உதவித் தலைவர் தேர்தலில், முன்னணி வேட்பாளர்கள் இருவரும் சம எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருப்பதால் வெற்றியாளர் யார் என்பது ஹஜ்ஜு பெருநாள் முடிந்துதான் அறிவிக்கப்படும்.

முன்னணி வேட்பாளர்களான ஜமாவி ஜாஃபாரும் கைருல் ஹருனும் 190 தொகுதிகளிலிருந்து ஆளுக்கு 73 தொகுதி வாக்குகளைப் பெற்றிருப்பதாக அம்னோ தேர்தல் குழுத் தலைவர் தாஜோல் ரோஸ்லி கசாலி கூறினார்.

“இனி, உறுப்பினர் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைத்துள்ளது என்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் வெற்றியாளர்  முடிவு செய்யப்படுவார்”, என்றாரவர்.

ஜமாவி, கைருல் அஸ்வான் தவிர்த்து முகம்மட் இர்வான் சுல்கிப்ளி, லொக்மான் நூர் ஆடம் ஆகியோரும் அப்பதவிக்குப் போட்டியிட்டனர். அவர்களுக்கு முறையே 26, 18 தொகுதி வாக்குகள் கிடைத்தன.