மசீச இளைஞர் தலைவர் கட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதியில்லை

1 weeடாக்டர் சுவா சொய் லெக் கட்சித் தலைவர் பதவியைத் தற்காக்கப் போவதில்லை என்றளித்த வாக்குறுதியை மீறினால் தாம் எந்தவொரு பதவிக்கும் போட்டியிடப்போவதில்லை என்று மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என மே 6-இல் வாக்குறுதி அளித்த சுவா, அவ்வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றால் கட்சி நம்பிக்கையை இழந்து விடும் என்று வீ கூறினார்.

சுவா, அவரின் வாக்குறுதியைக் காப்பாற்றினால் மட்டுமே கட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக வீ கூறினார். அதுவும் மத்திய பேராளர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அவர் போட்டியிடுவார்.